'நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி.. கார் வாங்குற ஆசையெல்லாம் வந்ததே இல்லை' - 'ப்ரேமம்' மேரி உருக்கம்

By Vignesh Selvaraj

கொச்சின் : 'ப்ரேமம்' மேரியாக தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துபோன அனுபமா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் குடும்பம் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார்.

'ப்ரேமம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது தெலுங்கு, தமிழ் மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். அனுபமா மலையாளத்தை விட தெலுங்கில் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார்.

 தெலுங்கு படம்

தெலுங்கு படம்

அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கிலும் பிஸியான நடிகையாகி விட்டார். இந்நிலையில், ராம் போதினேனியுடன் இணைந்து அவர் நடித்துள்ள 'உன்னடி ஒக்காடே ஜிந்தகி' படம் கடந்த அக்டோபர் 27-ம் தேதி திரைக்கு வந்துள்ளது.

 கார் வாங்க ஆசை இல்லை

கார் வாங்க ஆசை இல்லை

'உங்கள் முதல் கார் பற்றி சொல்லுங்கள்?' என அனுபமாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு 'என்னிடம் கார் இல்லை. கார் வாங்கவேண்டும் என எனக்கு ஆசை வந்ததே இல்லை. வருங்காலத்தில் தேவை ஏற்பட்டால் வேண்டுமானால் வாங்குவேன்.' எனக் கூறியுள்ளார்.

மிடில் கிளாஸ்

மிடில் கிளாஸ்

'நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். இப்போது கூட மிடில் கிளாஸ் தான். அப்பா இப்போதுகூட துபாயில் வேலை செய்கிறார். வருடத்திற்கு ஒருமுறை தான் இங்கே வருவார்.

ஸ்கூல் ஃபீஸ்க்குதான் சரியா வரும்

ஸ்கூல் ஃபீஸ்க்குதான் சரியா வரும்

நான் படிக்கும்போது அவரின் சம்பளம் ஸ்கூல் ஃபீஸ், மற்ற செலவுகளுக்கு தான் சரியாக இருக்கும். இப்படி இருக்கும்போது கார் வாங்கும் கனவு ஏற்படாததில் ஆச்சரியம் இல்லைதானே' எனக் கூறியுள்ளார் அனுபமா.

நெருக்கமான நடிகர்

நெருக்கமான நடிகர்

தெலுங்கு சினிமாவில் தனக்கு மிக நெருக்கமான நடிகர் என்று சர்வானந்தை கூறியுள்ளார் அனுபமா. சர்வானந்த் தமிழில், 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தவர் ஆவார்.

சர்வானந்த் - அனுபமா

சர்வானந்த் - அனுபமா

ஒரு நல்ல நண்பர் என்ற முறையில் சினிமா தவிர மற்ற விஷயங்களையும் நான் அவருடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். சர்வானந்தும், அனுபமாவும் தெலுங்கில் 'சதமானம் பவதி' என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X