சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு…புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்

சென்னை : மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் புதிய போட்டோசூட்களை வெளியிட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரேமம் படம் பலருக்கு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தது. மலையாள சினிமாவில் அதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாகவும் அது மாறியது.

 Anupama parameswaran in sarees new photoshoots

பிரேமம் திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன். இப்படம் மலையாள திரை ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரை ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடபட்ட திரைப்படம் ஆகும். இப்படம் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.

பின் தெலுங்கு திரையுலகில் நாகவல்லி படம் மூலமாக அறிமுகமானார் அனுபமா அங்கும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். பின் கொடி படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷூக்கு இவர் இரண்டாவது ஹீரோயினா நடித்து இருப்பார். ஆனால், இந்த படம் அவருக்கு அவ்வளவாக மார்கெட் இல்லாத காரணத்தால் மீண்டும் மலையாள சினிமாவிற்கே சென்று விட்டார் அனுபமா.

 Anupama parameswaran in sarees new photoshoots

தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். சிறிது காலம் கழித்து தற்போது கண்ணன் இயக்கி அதர்வா நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

 Anupama parameswaran in sarees new photoshoots

இவர் அடிக்கடி போட்டோஷுட்கள் எடுத்து அந்த புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனுபமா. தற்போது தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க சேலையை உடுத்தியுள்ளார். என்னத்தான் மாடல் டிரஸ்ல கலக்கினாலும் சேலையில பார்க்குறதே ஒரு தனி அழகுதான்.

 Anupama parameswaran in sarees new photoshoots

அதுவும் சேலையில உங்களை பார்க்கும் போது, சேலைகட்டும் பெண்ணுக்கொரு வசம் உண்டு என்றுத் தான் பாடத்தோன்றுகிறது என்று நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியுள்னர். இந்த உடையில் இவங்களை பார்க்கும் போது, இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தமிழில் ஆரம்பித்து விட்டதோ என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X