அனிமல் எஃபெக்ட்.. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து அப்படியொரு சீனில் நடித்த பிரேமம் பட நடிகை!

ஹைதராபாத்: இயக்குநர் மாலிக் ராம் இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன், சித்து மற்றும் மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள டில்லு ஸ்கொயர் (Tillu Square) திரைப்படத்தின் டிரெய்லர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

அந்த டிரெய்லர் முழுக்க உல்லு மூவிஸ் மாதிரி ஒரே லிப் லாக் முத்தக் காட்சிகளும் உடலுறவு பற்றிய வசனங்களும் நிறைந்து கிடப்பதை பார்த்து ரசிகர்கள் ஹேப்பி ஆகி உள்ளனர்.

Anupama Parameswaran long lip lock scene in Tillu Square trailer shocks fans

டில்லு ஸ்கொயர் படத்தில் ஹீரோவின் காட்சிகள் பல அப்படியே அனிமல் ரன்பீர் கபூரை நினைவுப்படுத்தும் விதமாகவே உருவாக்கப்பட்டு உள்ளது போலவே தெரிகிறது.

பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்: அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தில் அறிமுகமானார். பள்ளி மாணவியாக சிறு பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் உடன் இணைந்து கொடி படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

டில்லு ஸ்கொயர் டிரெய்லர்: பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன்மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி உள்ள டில்லு ஸ்கொயர் திரைப்படத்தின் டிரெய்லர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. சித்து ஜொன்னலகடா நடிப்பில் ஏற்கனவே டில்லு படம் வெளியாகி ஹிட் அடித்தது. இந்நிலையில், டில்லு ஸ்கொயர் என புதிய படத்தில் நடித்துள்ளார். இளைஞர்களை கவரும் அத்தனை ஐட்டங்களும் டில்லு ஸ்கொயர் படத்தில் இடம்பெற்று இருக்கிறது.

நீண்ட லிப் லாக் சீன்: படத்திற்கு ரசிகர்களை வரவைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு என்பது போல சமீப காலமாக இயக்குநர்கள் கிளாமரை எல்லாம் தாண்டி இன்டிமேசியான காட்சிகளை நிறைய நிறைத்து வருகின்றனர். டிரெய்லரிலேயே நீண்ட லிப் லாக் காட்சியை அனுபமா பரமேஸ்வரன் காரில் அப்படியொரு போஸில் ஏறி அமர்ந்து கொண்டு சித்துவுக்கு கொடுத்து அனலை கிளப்பி இருக்கிறார்.

அனிமல் படம் பார்த்த வேலை: இளைஞர்களை கவர்கிறேன் என்கிற பெயரில் இளைஞர்களை கெடுக்கும் வேலைகளை படங்களில் ஆரம்பித்து விட்டனர் என எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. இதற்கெல்லாம் காரணம் அனிமல் படம் தான் என்றும் குற்றச்சாட்டுகளை நெட்டிசன்கள் அடுக்கி வருகின்றனர். இன்னும் மோசமாக ஹாலிவுட் படங்களில் வருவது போல ஆடை அணியாமலே நடிக்க இங்குள்ள நடிகர்கள், நடிகைகளும் வெட்கமே இல்லாமல் ரெடியாகி விடுவார்கள் என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X