Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து மார்பிங் போட்டோ.. தனுஷ் பட ஹீரோயின் அதிர்ச்சி.. சைபர் கிரைமில் புகார்!
சென்னை: தனுஷ் பட நடிகையின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
'பிரேமம்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில், தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் நடிப்புப் பாராட்டப்பட்டது.
அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் தள்ளிப் போகாதே என்ற படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார்.
சிம்புவா.. சிவகார்த்திகேயனா.. அல்லு அர்ஜுனின் அந்த சூப்பர் ஹிட் பட ரீமேக்குக்கு நடக்குது போட்டி!

தள்ளிப் போகாதே
இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார். இதில் ஆடுகளம் நரேன், அமிதாஸ் பிரதான், காளி வெங்கட், ஜெகன், வித்யூலேகா ராமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கொரோனா பிரச்னை முடிந்ததும் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இது நானி, நிவேதா தாமஸ், ஆதி நடித்த நின்னுக்கோரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.

பேஸ்புக் கணக்கு
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக இயங்கி வருபவர். இந்நிலையில், இவரது பேஸ்புக் கணக்கு நேற்று திடீரென்று ஹேக் செய்யப்பட்டது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை குறிவைத்து சிலர் இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். பல நடிகர், நடிகைகளின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் இப்படி ஹேக் செய்யப்பட்டுள்ளன.

மார்பிங் போட்டோ
இப்போது அனுபமாவின் பேஸ்புக் கணக்கும் ஹேக்கர்கள் கையில் சிக்கியுள்ளது. இதையடுத்து மார்பிங் செய்த அவரது புகைப்படங்களை அந்த கணக்கில் பதிவு செய்துள்ளனர். இதை நடிகை அனுபமா பரமேஸ்வரன் பின்னர் தெரிவித்தார். மார்பிங் செய்யப்பட்ட படத்தையும் அவர் பதிவிட்டு இது மார்பிங் செய்யப்பட்ட போட்டோ. இதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
|
சகோதரி, அம்மா
அதோடு எந்த படத்தில் இருந்து மார்பிங் செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ள அனுபமா, 'இப்படியா செய்வீர்கள்? உங்களுக்கு எல்லாம் சகோதரி, அம்மா இல்லையா? இதுபோன்ற முட்டாள்தனங்களை விட்டுவிட்டு, நல்ல விஷயங்களுக்கு உங்கள் மூளையைப் பயன்படுத்துங்கள்' என்று அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கோரிக்கை
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்துள்ளார். பின்னர் டிவிட்டரில் அவர், அந்த மார்பிங் போட்டோவை பதிவிட்டு, அனுபமா ஆர்மி என்ற பெயரில் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த போட்டோவை தயவு செய்து பரப்ப வேண்டாம். இது கடுமையான வேதனையை தருகிறது' என்று கூறியுள்ளனர்.