ரவுடி பாய்ஸ் டப்பிங் பணிகளை தொடங்கிய அனுபமா பரமேஸ்வரன் !

சென்னை : தமிழ்,மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்

தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தள்ளிப்போகாதே திரைப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்

தெலுங்கில் கல்லூரி கதை களத்தில் உருவாகிவரும் ரவுடி பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் இப்போது அதன் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்

இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக

இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக

மலையாள சினிமாவில் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். 2015ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பின் தமிழ் சினிமாவில் கொடி மூலம் நேரடியாக என்ட்ரி கொடுத்தார். எதிர்நீச்சல் என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்

அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை

அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை

கொடி வெற்றிபெற்ற போதிலும் அதை தொடர்ந்து தமிழில் எந்த ஒரு படத்திலும் அனுபமா ஒப்பந்தமாகவில்லை. இதற்கிடையில் தெலுங்கு திரைப்படத் துறையில் கால் தடத்தைப் பதித்த இவருக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியும் வந்தார். இப்பொழுது தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுபமாவிற்கு தென்னிந்திய திரைத்துறையில் வாய்ப்புகள் குவிகிறது

தெலுங்கில் தொடர் வெற்றிகள்

தெலுங்கில் தொடர் வெற்றிகள்

தமிழில் கொடி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இப்பொழுது மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ள தள்ளிப்போகாதே திரைப்படம் நீண்ட இழுபறிக்குப் பிறகு திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நின்னுக்கோரி திரைப்படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் தான் தள்ளிப்போகாதே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் புகழ் பெற்ற அமிதேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.

ரவுடி பாய்ஸ் டப்பிங்

ரவுடி பாய்ஸ் டப்பிங்

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆதிஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் "ரவுடி பாய்ஸ்" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். முற்றிலும் கல்லூரி கதை களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் ஹர்ஷா கொனுகன்டி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது. வரும் சங்கராந்தி பண்டிகையை குறிவைத்து வெளியாக காத்திருக்கும் ரவுடி பாய்ஸ் படத்தின் டப்பிங் பணிகளை அனுபமா தொடங்கியுள்ளார் . அந்த புகைப்படங்களை இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X