ஜூனியர் என்டிஆர் முன் அசிங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்.. சக்சஸ் மீட்டில் நடிகைக்கு நேர்ந்த சங்கடம்!

ஹைதராபாத்: தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு சைரன் 108 திரைப்படம் வெற்றிப் படமாக அமையவில்லை. ஆனால் தெலுங்கில் இந்த ஆண்டு அவர் நடித்து வெளியான டில்லு ஸ்கொயர் (Tillu Square) திரைப்படம் இரண்டு வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.

அந்தப் படத்தின் நாயகன் சித்துவுடன் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகளில் நடித்து இளைஞர்களை குஷி ஏற்றிய அனுபமா பரமேஸ்வரன் நேற்று அந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.

Anupama Parameswaran upset over fans reactions at Tillu Square success meet

ஆனால், அந்த சந்தோஷமான தருணத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 கோடி வசூல்: மலையாள படங்களை தொடர்ந்து தெலுங்கு படங்களும் தொடர்ந்து 100 கோடி வசூலை மூன்றாவது முறையாக இந்த ஆண்டு கடந்துள்ளது. ஹனுமான் திரைப்படம் 300 கோடி வசூலையும் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியது. இந்நிலையில், சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து சமீபத்தில் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்தப் படமும் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளது.

அனுபமா பரமேஸ்வரன்: பிரேமம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுசுக்கு ஜோடியாக கொடி படத்திலும் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே படத்திலும் இந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் 108 திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஜெயம் ரவிக்கு மனைவியாகவும் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், தெலுங்கில் தற்போது வெளியாகியிருக்கும் டில்லு ஸ்கொயர் திரைப்படம் வசூல் வேட்டை ஆடி வருகிறது.

ஜூனியர் என்டிஆர் பங்கேற்பு: இயக்குநர் திரிவிக்ரம் மற்றும் ஜூனியர் என்டிஆர் நேற்று நடைபெற்ற டில்லு ஸ்கொயர் படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற அனுபமா பரமேஸ்வரனை பாராட்டினர். அந்த நிகழ்ச்சியில் மேடை ஏறி அனுபமா பேசும் போது அவருக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசிங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்: மேடையேறிய அனுபமா பரமேஸ்வரன் பேசும் போது ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர். உடனே நான் ஏதும் பேச வேண்டாமா என தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரன் கேட்கவே ஒரு ஆணியும் புடுங்க வேணாம் என்பது போல ரசிகர்கள் வேண்டவே வேண்டாம் என ஒன்று சேர்ந்தார் போல மறுக்க அனுபமா அப்செட் ஆகி விட்டார். ஜூனியர் என்டிஆர், திரிவிக்ரம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு நன்றி மட்டும் தெரிவித்து விட்டு கீழே இறங்கி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X