Lockdown: அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன்‘ புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்டவுன் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என முன்பாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமாவிற்கு அந்த படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். தொடர்ந்து, டிராகன், பைசன் காளமாடன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அனுபமா பரமேஸ்வரன் தற்போது லாக்டவுன் படத்தில் நடித்துள்ளார். இதில், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 'லாக் டவுன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

லாக்டவுன்: இப்படம் டிசம்பர் 5ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக தியேட்டர் திரையிடல்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டதால், படக்குழு ஆலோசனை நடத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று படக்குழு லாக்டவுன் திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி லாக்டவுன் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.

Anupama Parameswaran Lockdown
Photo Credit:

புது ரிலீஸ் தேதி: அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில், கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் 'கனா' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் அனுபமாவின் நடிப்பு படத்தின் பெரிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மாற்ற அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும், புதிய தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சமூக வலைதளங்களில் "டிசம்பர் 12 லெட்ஸ் செலிப்ரேட் லாக்டவுன்" என ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது. திரையரங்கு முன்பதிவு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X