‘லாக்டவுன்‘ படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்.. இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா?

சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்டவுன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தொடர் மழை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரனுக்கு அந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது. பிரேமம் படத்தை தொடர்ந்து, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பின் தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்து வந்த அனுபமா, டிராகன், பைசன் காளமாடன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது அனுபமா, லாக்டவுன் படத்தில் நடித்துள்ளார். இதில், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 'லாக் டவுன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Anupama Parameswaran Lockdown
Photo Credit:

லாக்டவுன்: இப்படம் டிசம்பர் 5ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக தியேட்டர் திரையிடல்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டதால், படக்குழு ஆலோசனை நடத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் படம் டிசம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தது ஆனால், அப்போது படம் சில பிரச்சனையால் வெளியாக வில்லை. தற்போது படக்குழு மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 30ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புது ரிலீஸ் தேதி: அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில்
கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் இருந்து 'கனா' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரனின் நடிப்பு படத்தின் பெரிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மாற்ற அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும், புதிய தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X