அனுபமா பரமேஸ்வரனின் அட்டகாசமான ஆட்டம்.. வெளியானது ’லாக்டவுன்’ படத்தின் ’லவ்வா லவ்வா’ பாடல்!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் லீடு ரோலில் நடித்து வரும் 'லாக்டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “லவ்வா லவ்வா” பாடல் வெளியாகி இளைஞர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது.

பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான கொடி படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது லீடு ரோலில் நடித்துள்ள ’லாக்டவுன்’ திரைப்படம் தாறுமாறாக உருவாகி வருகிறது.

Anupama Parameswaran Lockdown Lyca

பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த 'லாக்டவுன்’ திரைப்படம் சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதையின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான டிஜே டில்லு திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. தமிழில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த ’சைரன் 108’ படத்தில் நடித்துள்ளார்.

anupama parameswaran lockdown lyca

ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் உடன் இணைந்து சார்லி, லிவிங்ஸ்டன், நிரோஷா, பிரியா வெங்கட், அபிராமி, ரேவதி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலக மக்களை வீட்டிற்குள் அடைத்து வைத்த லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை மையக்கருவாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான லாக்டவுன் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்ததாக இந்த படத்தில் இருந்து அட்டகாசமான ஒரு அறிமுக பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

என்.ஆர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைப்பில் சினேகன் பாடல் வரிகளில் பிரியா ஜெர்சன் பாடிய “லவ்வா லவ்வா” பாடலில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அசத்தலாக ஆடியுள்ள இந்த பாடல் ஒரு பார்ட்டி பாடலாக உருவாகி இளைஞர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. விரைவில் லாக்டவுன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X