Lockdown Review: அனுபமாவின் லாக்டவுன் படம் எப்படி இருக்கு? செய்யாறு பாலுவின் விமர்சனம்!
சென்னை: அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த லாக்டவுன்திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இதில், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 'லாக் டவுன்' குறித்து செய்யாறு பாலு தனது விமர்சனத்தை கூறியுள்ளார்.
லாக்டவுன் படத்தின் கதை என்னவென்றால் தச்சு வேலை செய்து கஷ்டப்பட்டு தனது குடும்பத்தை லிவிங்ஸ்டன் நடத்தி வருகிறார். அவருடைய மனைவியாக நிரோஷாவும், இரண்டு மகளில் ஒரு மகளாக அனுபமாவும் நடித்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தில் இருக்கும் அனுபமா தனது குடும்பத்திற்காக வேலை தேடி அழைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தான் அனுபமாவின் தோழி ஒருவர், ஒரு இரவு பார்ட்டிக்கு அழைக்கிறார். அந்த பார்ட்டியில் ஒருவரை நான் அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் உனக்கு நிச்சயம் வேலை வாங்கி தருவார் என சொல்ல, அனுபமா அந்த பார்ட்டிக்கு செல்கிறார். அந்த பாட்டியில், ஒரு அசம்பாவிதமான சம்பவம் நடக்கிறது, அந்த சம்பவத்தை தொடர்ந்து. மறுபக்கம் கொரோனா வேகமாக பரவி, யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என உத்தரவு வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் லாக்டவுன் திரைப்படம் கதை.

லக்டவுன் கதை: கொரோனா சமயத்தில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதை, நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இதை இப்போது, நினைத்தாலும் மனசு கஷ்டமாக இருக்கும். அதில், ஊரடங்கு உத்தரவு, தெருவில் யாரும் நடக்கக்கூடாது, கோ கொரோனா கோ கொரோனா என கத்தியது, கை தட்டியது என பல விஷயத்தை காமெடியாக படத்தில் சொல்வார்கள் என் நாம் நினைத்தால், இந்த திரைப்படத்தில் கதையே வேறு விதமாக இருக்கிறது. கதையின் நாயகியாக அனுபமா மொத்த கதையையும் தனது தோளில் சுமந்து இருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதி ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவதால், படத்தில் சற்று தோய்வு ஏற்படுகிறது. அதேபோல, படத்தில் பல காட்சிகளில் அழுத்தமான பல விஷயங்களை இயக்குனர் சொல்ல தவறி இருக்கிறார். ஆனால், கடைசியாக படத்தில் இந்த உலகத்தில் பெற்றோரைத்தவிர வேறு யாரையும் நம்பதே என்று சொன்ன விதம் மிகவும் ரசிக்கும் படி இருந்தது என செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











