கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறேனா?: அனுபமா சொன்ன 'ந...ந...' விளக்கம்
திருவனந்தபுரம்: கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவுடன் காதல் என்று எழுந்த பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடித்த கொடி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அனுபமா தற்போது தெலுங்கு திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியது. ட்விட்டரில் பும்ரா பின்தொடரும் ஒரே நடிகை அனுபமா தான். மேலும் அனுபமா பும்ராவின் ட்வீட்டுகளை ரீ ட்வீட் செய்கிறார்.
பதிலுக்கு பும்ரா அனுபமா பரமேஸ்வரனின் ட்வீட்டுகளை லைக் செய்கிறார். இதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து அனுபமாவிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எனக்கும், பும்ராவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பர்களா, அப்படி என்றால் காதல் கன்ஃபர்ம் என்று நெட்டிசன்கள் பேசத் துவங்கிவிட்டனர். திரையுலக பிரபலங்கள் அவர் என் காதலர் இல்லை நல்ல நண்பர் மட்டுமே என்று கூறினால் அது காதல் தான். இதை பலமுறை பார்த்திருக்கிறோம், அனுபமாவுக்கும் அது தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அய்யோ, அவர் யாரை காதலித்தால் என்ன, காதலிக்காவிட்டால் என்ன நம் வேலையை பார்ப்போமே. முன்னதாக பும்ராவும், ஜெயம் ரவியின் அடங்கமறு பட ஹீரோயின் ராஷி கன்னாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து அறிந்த ராஷி கன்னா பதறிப் போய் கூறியதாவது,
பும்ரா ஒரு கிரிக்கெட் வீரர் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அதை தாண்டி அவரை பற்றி எதுவும் தெரியாது. தனிப்பட்ட முறையில் அவரை தெரியாது மேலும் அவரை நான் சந்தித்து பேசியதும் இல்லை. அதனால் நானும், பும்ராவும் காதலிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார்.
நடிகைகளின் பெயர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து அவ்வப்போது அடிபடுவது வழக்கமாகிவிட்டது. வதந்தி கிளம்பி தீயாக பரவிய பிறகு தான் சில நடிகைகளுக்கு தகவல் கிடைத்து மறுப்பு தெரிவிக்கிறார்கள். பாவம்.


Click it and Unblock the Notifications











