மீண்டும் இணைந்த அனுபமா.. சாய்பல்லவி… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : நிவின் பாலியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.
2015ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற நிலையில், அந்த திரைப்படத்தின் மூலம் சாய் பல்லவி கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
பிரேமம் திரைப்படத்தில் சாய்பல்லவி உடன் அனுபமா, மடோனா செபாஸ்டின் என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்க இப்பொழுது நடிகை சாய் பல்லவி மற்றும் அனுபமா 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் ரசிகர்கள்
தமிழ் திரைப்படங்களுக்கு மலையாள ரசிகர் இடையே பெரும் வரவேற்பு இருந்து வருவதைத் தொடர்ந்து அவ்வப்போது வெளியாகும் மலையாள திரைப்படங்களையும் தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இரண்டும் கலந்தவாறு
அவ்வாறு 2015ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகை அதிர வைத்த பிரேமம் திரைப்படம் தமிழ் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. காதல், ஆக்ஷன் என இரண்டும் கலந்தவாறு உருவாகியிருந்த பிரேமம் திரைப்படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் தமிழில் சக்கைப்போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

தாடி ட்ரெண்டானது
அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடிக்க அதில் இவரது தாடி மற்றும் மீசை கெட்டப் பிரபலமாகி பின் அது இளசுகள் இடையே ட்ரெண்டானது.

மிகச்சிறந்த அறிமுகத்தை
சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் என மூன்று கதாநாயகிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிரேமம் திரைப்படம் மூவருக்குமே மிகச்சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.

நிவின் பாலிக்கு ஜோடியாக
பள்ளிப் பருவம், கல்லூரி பருவம் மற்றும் இளைஞர் பருவம் என மூன்று பருவங்களையும் வித்தியாசப்படுத்தி காட்டியிருந்த இந்த திரைப்படத்தில் முதல் பாதியில் பள்ளிப்பருவத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருப்பார்.

காதல் காட்சிகள்
இரண்டாம்பாதியில் கல்லூரிப் பருவத்தில் சாய் பல்லவி மலர் டீச்சராக வந்து கொஞ்சும் தமிழில் வசீகரித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்ததோடு, நிவின் பாலி உடனான காதல் காட்சிகள் மிக பிரபலமாக பேசப்பட்டது.

யாரும் எதிர்பாராத வகையில்
அதேபோல இளைஞர் பருவத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கிளைமாக்ஸ் காட்சியில் நிவின் பாலிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் வந்து அனைவரையும் ஆச்சரியப் படுத்திருப்பார்.

பிரேமம் திரைப்படம்
இவ்வாறு 3 கதாநாயகிகளும் வித்தியாசமான வேடங்களில் தங்களது முதல் திரைப்படத்திலேயே நடித்திருக்க பிரேமம் திரைப்படத்திற்குப் பின் மீண்டும் இணையாத இவர்கள் இப்பொழுது இணைந்துள்ளனர்.

ஞாபகம் இருக்கிறதா
அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சாய் பல்லவி என இருவரும் பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வர இப்பொழுது இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மேரி மற்றும் மலர் இவர்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என சிலாக்கித்து கூறியிருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











