என்னிடம் தவறாக நடக்க முயன்றார் அந்த ஆன்மீகவாதி.. தப்பித்து வந்தேன்.. பிரபல நடிகை பகீர் புகார்!

By

மும்பை: தனது 18 வயதில் ஆன்மீகவாதி ஒருவர் தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்று பிரபல நடிகை பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

பிரபல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடூரங்களைப் பற்றி கூறி வருகின்றனர்.

சிலர் தங்களுக்கு சிறுவயதில் நேர்ந்த பாலியல் கொடுமைகளை இப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனக்கு தெரிந்தவர்

எனக்கு தெரிந்தவர்

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் மகள், இரா கான் தனது 14 வயதில் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரிவித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 'அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது பற்றி தெரியவில்லை. அவர் எனக்கு தெரிந்தவர்தான்.

புரிந்து கொள்ள

புரிந்து கொள்ள

இருந்தாலும் அது தினமும் நடக்கவில்லை. என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு ஒரு வருடம் ஆனது. பின்னர் நானே இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியேறிக் கொண்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், பிரபல இந்தி நடிகை ஒருவர், தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி இப்போது தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டுக்காடு ஹீரோயின்

போட்டுக்காடு ஹீரோயின்

பிரபல இந்தி நடிகை அனுப்பிரியா கோயங்கா. இவர், தெலுங்கில் மனோஜ் மன்சு ஹீரோவாக நடித்த போட்டுக்காடு என்ற படத்தில் நான்கு ஹீரோயிகளில் ஒருவராக அறிமுகமானவர். பின்னர் இந்தியில், பாபி ஜசூஸ், டிஷூம், டாடி, டைகர் ஜிந்தா ஹே, தீபிகா படுகோனின் பத்மாவத், வார் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

அதிகமாக நம்பினார்

அதிகமாக நம்பினார்

இவர், தனது 18 வயதில் ஓர் ஆன்மீகவாதி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் கவுளை நம்புகிறேன். என் தந்தை கடவுளை நம்புவதை விட, ஆன்மீகவாதிகளையும் சாமியார்களையும் அதிகமாக நம்பினார். அது அவரை குடும்பத்தின் மீதான கவனத்தில் இருந்து திசைத் திருப்பியது.

நம்ப ஆரம்பித்தேன்

நம்ப ஆரம்பித்தேன்

அது கஷ்டத்தை அளித்தது. என் குடும்பத்தினர் அந்த ஆன்மீகவாதியை அதிகமாக நம்பினார்கள். நானும் நம்ப ஆரம்பித்தேன். அவர் நியாயமானவராக இருந்தார். சரியான விஷயங்களைச் சொன்னார். ஆனால், எனக்கு 18 வயதாக இருந்தபோது என்னை பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.

தப்பிக்க முடிந்தது

தப்பிக்க முடிந்தது

ஆனால், நான் என்னை அவருக்கு சாதகமாகப் பயன்படுத்த விடவில்லை. அந்த சம்பவம் என்னுள் ஆறாத வடுவாக நீண்ட நாட்கள் இருந்தது. ஒருவழியாக இப்போது அது மறைந்துவிட்டது. அந்த நேரத்தில் என்னால் அவரிடம் இருந்து தப்பிக்க முடிந்தது. ஆனாலும் சிறிது நேரம் போராட வேண்டி இருந்தது.

தவறான அறிகுறி

தவறான அறிகுறி

அதற்கு முந்தைய சந்திப்புகளில் இருந்தே அவரிடம் தவறான அறிகுறிகளை கணித்தேன். ஆனால், அவர் அப்படிபட்டவர் அல்ல என்று என்னை நானே சந்தேகித்தேன். ஏனென்றால் நான அவரை முழுமையாக நம்பினேன். இவ்வாறு நடிகை அனுப்பிரியா கோயங்கா கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read more about: anupria goenka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X