அக்கா அபிநயஸ்ரீ வழியில் தம்பி கெவின்... அனுராதாவின் அடுத்த வாரிசு!
முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகன் இப்போது ஹீரோவாகியுள்ளார். என்ன பிடிச்சிருக்கா.. இதுதான் அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் பெயர்.
ஏற்கனவே கெவினின் அக்கா அபிநாயஸ்ரீ நடிகையாக அறிமுகமாகி பிரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் நடன மாஸ்டராக மாறியுள்ளார். இந்த நிலையில் கெவின் தனது அக்கா வழியில் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

என்ன பிடிச்சிருக்கா...
பிரைட் பியூச்சர் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பி.ஏ.பிரகாசம் தயாரிக்கும் படம் என்ன பிடிச்சிருக்கா.
(என்ன பிடிச்சிருக்கா ஹாட் கேலரி)

அனுராதா மகன் கெவின்
இந்த படத்தில் கெவின் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகையான அனுராதாவின் மகன்.

அம்மா, அக்கா வழியில்
ஏற்கனவே அனுராதாவின் மூத்த மகள் அபிநயஸ்ரீ நடிகையாகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் குடும்பத்தில் இருந்து இன்னொருவர் நடிகராகி இருக்கிறார்.

பிரீத்தி.. !
கதாநாயகியாக பிரீத்தி விஜ் நடிக்கிறார். இவர்கள் தவிர ரவிமரியா உள்ளிட்டோரும், முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் பி.ஏ.பிரகாசமும் நடிக்கிறார்கள்.

இசைக்கு ஸ்ரீவித்ய கலை
ஒளிப்பதிவை ராஜாவும், இசையை ஸ்ரீவித்யா கலையும், பாடல்களை விவேகாவும் பார்த்துக் கொள்கிறார்கள்.

அக்காவே டான்ஸ் மாஸ்டர்
தம்பி கெவின் அறிமுகமாகும் இப்படத்தில் அக்கா அபிநயஸ்ரீ டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றவுள்ளார். கூட காதல் கந்தாஸ், ராபர்ட் ஆகியோரும் மாஸ்டர்களாக பணியாற்றவுள்ளனர்.

சுப்புராஜன்தான் டைரக்டர்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - சுப்புராஜ். இவர் இயக்குனர்கள் விக்ரமன், ரவிமரியா போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

கதை என்னன்னா...
சிலம்பாட்டம் மற்றும் கிராமிய கலைகள் அத்தனையிலும் தேர்ச்சி பெற்ற கிராமத்து இளைஞனுக்கும் அமெரிக்காவில் படித்து முடித்து தனது தாத்தாவுடன் தாயகம் திரும்பும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் மற்றும் குடும்பத் தகராறு, கிராமிய பழக்க வழங்கங்களை மையப்படுத்திக் கதை உருவாகப்பட்டுள்ளது. கம்பம், தேனி, கொடைக்கானல் போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்.


Click it and Unblock the Notifications











