»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை அருகே மீனம்பாக்கத்தில் நடந்த சாலை விபத்தில் முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதாவின் அப்பாவும்,நடிகை அபினயஸ்ரீயின் தாத்தாவுமான கிருஷ்ணகுமார் பலியானார். அவருக்கு வயது 62.

கிருஷ்ணகுமார் வடபழனியில் வசித்து வந்தார். இவரது உறவினர் ஜோசப் என்பவரின் மனைவி சவதிஅரேபியாவுக்கு 8ம் தேதி சென்றார். அவரை வழியனுப்புதவற்காக தனது ஸ்கூட்டரில் மீனம்பாக்கம்சென்றிருந்தார்.

வழியனுப்பிவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மீனம்பாக்கம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி,ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் கிருஷ்ணகுமார் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப்பலனின்றி இறந்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil