மீண்டும் மடியில் உட்கார்ந்த அந்த இயக்குநர்.. தலையில் அடித்துக் கொண்ட டாப்சி.. என்னன்னு பாருங்க!
மும்பை: பாலிவுட்டில் பிசியாக ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிகை டாப்சியின் மடியின் மீது மீண்டும் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தான் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
ஏற்கனவே நடிகை டாப்சியின் மடியில் அனுராக் காஷ்யப் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

தோபாரா
தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப், பாலிவுட்டில் முன்னணி இயக்குநர். அனுராக் இயக்கத்தில் 2018ல் வெளியான மன்மர்ஸியான் திரைப்படத்தில் டாப்சி நடித்து பட்டையை கிளப்பினார். இந்நிலையில், மீண்டும் அனுராக் இயக்கத்தில் தோபாரா எனும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் டாப்சி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

படுக்கைக்கு அழைத்தார்
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் கடந்த ஆண்டு மீடூ சர்ச்சையை கிளப்பி ஒட்டுமொத்த பாலிவுட்டையை பரபரக்க செய்தார். அனுராக் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்றும், தன்னிடம் அத்துமீறினார் என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைக்க, பாலிவுட்டில் அனுராக்கிற்கு எதிரான அலை எழுந்தது.

நல்ல நண்பர்கள்
இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் அளித்த புகாரை அப்போதே மறுத்து அனுராக் அப்படி பட்டவர் அல்ல பெண்களை மதிப்பவர் என நடிகை டாப்சி அனுராக் பக்கம் நின்று உறுதியோடு குரல் கொடுத்தார். அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்சி இருவருமே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மடியில் அமர்ந்து
இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக நடிகை டாப்சி குரல் கொடுத்த நிலையில், பாலிவுட்டில் நெட்டிசன்கள் நடிகை டாப்சியின் மடி மீது இயக்குநர் அனுராக் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருவரையும் கோர்த்து விட்டு இழிவாக ஏகப்பட்ட ட்ரோல்களை பதிவிட்டனர்.

மறுபடியும் மடியில்
இந்நிலையில், மீண்டும் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் தோபாரா எனும் படத்தில் நடிக்கப் போகிறேன் என்கிற அறிவிப்பை வெளியிட்ட டாப்சி, மீண்டும் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தலையில் அடித்த டாப்சி
ஆனால், இந்த ஐடியா இயக்குநர் அனுராக்கின் ஐடியாவாகத்தான் இருக்கும் என்பது இந்த போட்டோவை பார்த்தாலே தெரிகிறது. மறுபடியும் அந்த சர்ச்சையை கிளப்ப வேண்டுமா? என்பதை போல இயக்குநர் அனுராக் தனது மடியில் அமரும்போது தனது தலையில் டாப்சி அடித்துக் கொள்ளும் போஸ் அதனை தெளிவுபடுத்துகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடி
ராஷ்மி ராக்கெட், சபாஷ் மித்து, ஹசீன் தில்ருபா, லூப் லபேட்டா என ஏகப்பட்ட பாலிவு படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை டாப்ஸி. தமிழில் ஜெயம் ரவியுடன் ஜன கண மண படத்திலும், விஜய்சேதுபதியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், 3 இடியட்ஸ் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் டாப்சி ஒப்பந்தமாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











