twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாஜகவினரால் மகளுக்கு பலாத்கார மிரட்டல்... மோடியிடம் புகார் கூறிய அனுராக் காஷ்யப்

    தன் மகளுக்கு மிரட்டல் தரும் பாஜகவினர் பற்றி பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

    By Staff
    |

    சென்னை: தன் மகளுக்கு தொல்லை தரும் பாஜக ஆதரவாளர்களை எப்படி அணுகுவது என பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்.

    மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. இதற்காக பிரதமர் மோடிக்கு திரையுலகப் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், டிவிட்டர் வாயிலாக மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகரும், பிரபல இயக்குநருமான அனுராக் காஷ்யப். கூடவே, அந்தப் பதிவில், 'நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், என் மகளை மிரட்டும் உங்கள் ஆதரவாளர்களை எப்படி அணுகுவது என்று எங்களுக்கு சொல்லுங்கள்' எனவும் அவர் பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    பலாத்கார மிரட்டல்:

    கூடவே தனது பதிவில் ஸ்கீரின் ஷாட் ஒன்றையும் அனுராக் இணைத்திருந்தார். அதில் சவுகிதார் ராம் சங்கி என்பவர், அனுராக்கின் மகள் ஆலியா காஷ்யப்புக்கு பலாத்கார மிரட்டல் விடுத்திருந்தார். அனுராக்கின் இந்த டிவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

    பாஜக ஆதரவாளரின் பதில்:

    பாஜக ஆதரவாளரின் பதில்:

    இதற்குப் பதிலளிக்கும் வகையில் பாஜகவைச் சேர்ந்த அசோக் பண்டிட் என்பவர் ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘பாஜக வெற்றி பெற்றுள்ளதால், உலகமே மகிழ்வாக உள்ள தருணத்தில், இது மோடிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, யாரோ போட்டோஷாப் செய்து பரப்பும் செய்தி' எனத் தெரிவித்துள்ளார்.

    அனுராக் கோபம்:

    அனுராக் கோபம்:

    இதைப் பார்த்து கோபமடைந்த அனுராக், ‘மிஸ்டர் அசோக் நீங்கள் எப்போதும் டிவிட்டரிலேயே சுற்றிக் கொண்டிருக்காமல், கொஞ்சம் இன்ஸ்டாகிராம் பக்கமும் சென்று பாருங்கள். இது நிஜமாகவே வந்த மிரட்டல் தான்' எனப் பதில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    போலீசில் புகார்:

    போலீசில் புகார்:

    அதனைத் தொடர்ந்து, ‘இது போன்று என் மகளுக்கு மிரட்டல் வந்தால், இப்படி பிரதமரிடம் புகார் தெரிவிக்க மாட்டேன். உடனடியாக போலீசிடம் சென்று புகார் அளிப்பேன்' என அசோக் தெரிவித்துள்ளார். அசோக்கின் இந்தப் பதிவைப் பார்த்து, பலர் அவரை திட்டி வருகின்றனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக அனுராக் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    English summary
    Director Anurag Kashyap took to social media and congratulated Prime Minister Narendra Modi on his historic win at Lok Sabha Elections 2019. However, in the same tweet he also expressed his concern about Modi's followers who sent threats to his daughter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X