விடமாட்டார் போல.. மீண்டும் பிகினியில் மிரட்டிய பிரபல இயக்குநரின் மகள்.. வைரலாகும் புகைப்படம்!

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யாப் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் பிகினி அணிந்ததற்காக தன்னை ட்ரோல் செய்த நபர்களை விட்டு விளாசிய ஆலியா காஷ்யப் மீண்டும் பிகினி உடையில் மிரட்டி உள்ளார்.

ஆலியாவுக்கும் அவரது காதலருக்கும் பிரேக்கப் ஏற்பட்டதாகவும் நெட்டிசன்கள் பரப்பிய வதந்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

அனுராக் வீட்டில் ரெய்டு

அனுராக் வீட்டில் ரெய்டு

நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக என்ட்ரி கொடுத்திருந்தார் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்சிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை கிளப்பியது.

ஆபாச கமெண்ட்

ஆபாச கமெண்ட்

இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் பிகினி உடையில் அவர் வெளியிட்ட போட்டோவிற்கு சில நெட்டிசன்கள் ஆபாச கமெண்ட் அடித்த நிலையில், அவர்களுக்கு எதிராக கொதித்தெழுந்து இவர் பதிவிட்ட போஸ்ட் ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களின் ஆதரவை பெற்றது.

லவ் பிரேக்கப் ஆகிடுச்சா

லவ் பிரேக்கப் ஆகிடுச்சா

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆலியா காஷ்யப் குறித்து சில தினங்களுக்கு முன்பாக லவ் பிரேக்கப் வதந்தி ஒன்று வேகமாக பரவியது. 20 வயது ஆகும் ஆலியா தனது காதலர் ஷான் கிரிகோயரை பிரிந்து விட்டார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாங்கள் ஒன்றும் பிரியவில்லை. ஷான் வெளிநாடு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார் என்றார்.

மீண்டும் பிகினியில்

மீண்டும் பிகினியில்

இந்நிலையில், தற்போது மீண்டும் பிகினி உடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூக வலைதள ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஆலியா காஷ்யப். யூடியூபராக கலக்கி வரும் இவரை, சீக்கிரமே பாலிவுட் ஹீரோயின் ஆகிடுங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X