ஜெயிலுக்கு சென்ற பிரபல இயக்குநர்.. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி.. என்ன நடந்தது?
மும்பை: அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள். இயக்கத்தில் எப்படி பிரபலமாக இருக்கிறாரோ அதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
Paanch படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுராக் காஷ்யப் அதன் பிறகு அவர் இயக்கிய Black Friday,நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமான், தேவ் டி உள்ளிட்ட படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் இயக்கியதிலேயே பெஞ்ச் மார்க்காக கருதப்படுவது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படம். அந்தத் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்க்க சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் அனுராக் காஷ்யப். அவரது இயக்கத்தில் நடித்தால் சிறந்த நடிகராக வரலாம் என்ற எண்ணம் பல கலைஞர்களிடம் இருக்கிறது.

அனுராக்கின் கென்னடி: அவர் கடைசியாக ராகுல் மற்றும் சன்னி லியோனை வைத்து கென்னடி என்ற படத்தை இயக்கியிருந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட் நைட் ஸ்க்ரீனிங்கில் படம் திரையிடப்பட்டு பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது. அதற்கு அடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் படத்தில் அனுராக் காஷ்யப்பின் டச் ஆங்காங்கே இருந்ததாகவும்; இன்னுமொரு படத்தில் அவர் தரமான கம்பேக் கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கூறினர்.

நடிகர் அனுராக்: இதற்கிடையே அனுராக் காஷ்யப் நடிகராகவும் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தமிழில் அவர் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு டீசண்ட்டாகவே இருந்தது. நயன்தாராவும், அதர்வாவும் லீடு ரோல் செய்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அனுராக்குக்குள் நல்ல நடிகர் இருப்பதை திரையுலகத்தினரும், ரசிகர்களும் கண்டுகொண்டனர். அதனையடுத்து அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தன.
ஆசைப்பட்ட அனுராக்: நடிகராக தனக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்த அனுராக்; லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆசை என்றும் கூறினார். அதனையடுத்து லியோ படத்தில் சில நிமிடங்கள் மட்டும் வந்துபோனார். சமீபத்தில்கூட விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்த அனுராக்; அடுத்ததாக சுந்தர்.சியுடன் சேர்ந்து ஒன் டூ ஒன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அனுராக் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப், "நான் சிறையில் இருந்திருக்கிறேன். ஒருவரை அடித்துவிட்டேன். அதனால் நான் ஜெயிலுக்கு சென்றேன். நான் தவறான ஆள் மேலே கையை வெச்சிட்டேன். ஒருநாள் இரவு முழுக்க ஜெயிலில் இருந்தேன். யாரை அடித்து நான் ஜெயிலுக்கு போனேனோ அவரேதான் என்னுடைய வாழ்க்கை மாறியதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர்தான் என்னை ஜெயிலில் இருந்து வெளியேயும் கொண்டுவந்தார்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அட இப்படியும் நடந்திருக்கா; என்ன நடந்திருக்கும் யாரை அனுராக் அடித்திருப்பார் என்று கேள்வி மேல் கேள்வி சமூக வலைதளங்களில் கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











