சர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்!

By Vignesh Selvaraj

Recommended Video

2 ஆண்டுகள் சர்ச்சைகள் கடந்து மீண்டும் விஜய் அவார்ட்ஸ்..வீடியோ

சென்னை : விஜய் டிவி வழங்கும் 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி வரும் மே 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சைகளால் கடந்த 2 ஆண்டுகளாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

2 வருட இடைவெளிக்குப் பிறகு பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைக் காண ரசிகர்களும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

Anurag kashyap is also part of the vijay awards jury

இந்நிலையில், விஜய் அவார்ட்ஸ் விருதுகளை தேர்ந்தெடுக்கும் ஜூரி குழுவினர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடுவர்கள் பட்டியலில் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ், யூகி சேது, நடிகை ராதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களோடு பாலிவுட்டின் பிரபலமான இயக்குநரான அனுராக் காஷ்யப் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 'தேவ் டி', 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' ஆகிய பிரபலமான படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தமிழ் சினிமாவை வெகு காலமாகவே பாஸிடிவ்வாக அணுகி வருபவர்.

நிறைய முறை தமிழ் சினிமா உலகைப் பற்றி பாராட்டியிருக்கிறார். இளைய தலைமுறை இயக்குநர்கள் பலருக்கு ரோல் மாடல் இயக்குநராக இருக்கும் இவர் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்தும் இருக்கிறார். விஜய் அவார்ட்ஸ் நடுவர் பட்டியலில் அனுராக் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X