ஜாமியா போராட்டம்.. 'முதுகெலும்பில்லாதவர்'.. ரஜினி வில்லனை பப்ளிக்காக அசிங்கப்படுத்திய நயன் வில்லன்!

நடிகர் அக்ஷய் குமார் முதுகெலும்பு இல்லாதவர் என நெட்டிசன் கூறிய கருத்தை ஆமோதித்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் முதுகெலும்பு இல்லாதவர் என பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் லத்தி சார்ஜில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக பலர் களமிறங்கியுள்ளனர். நடிகைகள் டாப்சி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோர் வன்முறை சம்பவத்தை கண்டித்து டிவீட் செய்துள்ளனர்.

கிண்டல் வீடியோ

இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை கிண்டல் செய்யும் வகையிலான ஒரு வீடியோ டிவீட்டை நடிகர் அக்ஷய் குமார் முதலில் லைக் செய்துவிட்டு, பிறகு டிஸ்லைக் செய்தார். மேலும், தவறுதலாக கைப்பட்டு அந்த டிவீட்டை லைக் செய்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்

திட்டி தீர்க்கும் நெட்டிசன்

ஆனால் அக்ஷயின் விளக்கத்தை ஏற்க நெட்டிசன்கள் மறுத்துவிட்டனர். அவரை கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆதரிக்கும் அக்ஷய் குமாரை புறக்கணிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

முதுகெலும்பில்லாத அக்ஷய்

மேலும் நெட்டிசன் ஒருவர், முதுகெலும்பில்லாத அக்ஷய் குமார் எப்படி தற்காப்பு கலைகளை கற்றார் எனக் கேட்டு டிவீட் செய்திருந்தார். அதனை ஆமோத்திக்கும் வகையில், 'Absolutely' எனும் கமெண்டுடன் ரீடிவீட் செய்துள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

பாலிவுட்டில் சலசலப்பு

பாலிவுட்டில் சலசலப்பு

அனுராக்கின் இந்த டிவீட் பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய டாப் ஸ்டாராக இருக்கும் அக்ஷய் குமாரை, முதுகெலும்பில்லாதவர் என அனுராக் சாடியிருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X