10 நிமிஷத்துக்கு எனக்கு இவ்ளோ தரணும்.. சும்மா வரமாட்டேன்.. திடீரென ட்வீட் போட்ட லியோ பட நடிகர்!
மும்பை: பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வேண்டுமென்றே வான்டட்டாக வந்து நடித்து உயிரை விட்டுச் சென்றார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பாலிவுட் இயக்குநரான இவர், இனிமேல் சினிமா சம்பந்தமாக தன்னை சந்திக்க வருபவர்கள் பணம் கட்டினால் மட்டுமே தன்னை சந்தித்து பேச முடியும் என்கிற கண்டிஷனைப் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

அனுராக் காஷ்யப்: பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய முதல் படமான பாஞ்ச் இன்னமும் வெளியாகவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய பிளாக் ஃப்ரைடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேங்ஸ் ஆப் வாசிப்பர், மன்மர்சியான் உள்ளிட்ட படங்கள் பாடி வீட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. கடைசியாக சன்னி லியோன் நடிப்பில் உருவான கென்னடி படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கடந்த ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை அள்ளியது.
லியோ படத்தில்: நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக கோலிவுட்டில் அறிமுகமான அனுராக் காஷ்யப் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் அவரது நண்பராக ஒரே ஒரு காட்சிக்கு வந்து துப்பாக்கியால் குண்டடி பட்டு சாகும் காட்சியில் நடித்திருப்பார். அடுத்ததாக ஒன் டு ஒன் எனும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

ரொம்ப டயர்டு ஆயிட்டேன்: சினிமா சம்பந்தமாக தன்னை சந்திக்க பலரும் வருவதாகவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமே என்கிற நல்ல நோக்கத்துடன் அவர்களை சந்தித்து அதிக நேரத்தை செலவழித்து விட்டேன். ஜீனியஸ் என நினைத்துக் கொண்டு வருபவர்கள் பலரும் முட்டா பீஸ் ஆகவே உள்ளனர். அதனால், என்னுடைய நேரம் தான் அதிகம் செலவாகிறது. பணம் சம்பாதிக்க முடியவில்லை. இனிமேல், என்னை அணுக நினைப்பவர்கள் முன் பணம் செலுத்தினால் மட்டுமே என்னுடன் பேச முடியும் என அதிரடியான அறிவிப்பை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பத்து நிமிஷத்துக்கு இவ்வளவு: 10 முதல் 15 நிமிடங்கள் சந்தித்து என்னுடன் பேச வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் அரை மணி நேரம் என்னுடன் பேச வேண்டுமென்றால் 2 லட்சம் ரூபாய் தரவேண்டும், அதுவே ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ருபாய் பணம் கொடுத்தால் மட்டுமே அவர்களுடன் சினிமா சம்பந்தமாக உரையாட சம்மதிப்பேன் என பிரபல இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கலையை தாண்டி காசு தான் முக்கியம் என பதிவிட்டு இருப்பது ரசிகர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் இயக்குநர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலியல் புகார்: பாயல் கோஷ் எனும் பாலிவுட் நடிகை அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். ஆனால், அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக டாப்ஸி உள்ளிட்ட நடிகைகள் களமிறங்கிய நிலையில், பாயல் கோஷின் பாலியல் குற்றச்சாட்டு பெரிதாக எடுபடவில்லை.


Click it and Unblock the Notifications











