சுந்தர் சி படத்தில் இணைந்த.. ‘’இமைக்கா நொடிகள்’’ வில்லன்… அப்போ படத்தில் சம்பவம் இருக்கு!

சென்னை : சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் புதியப் படத்தில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை 3' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் 'தலைநகரம் 2' உள்பட மூன்று படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி தற்போது கே. திருஞானம் எழுதி இயக்கும் ஒன் 2 ஒன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக, ராகினி திரிவேதி நடிக்க, விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விக்ரம் மோகன் ஒலிப்பதை செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். 24 HRS நிறுவனம் தயாரிக்கும் ஒன் 2 ஒன் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Anurag kashyap plays the Villain in sundar c next Movie

இந்நிலையில், நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் ஒன் 2 ஒன் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக சென்னை வந்துள்ள அவர், சுந்தர்.சி மற்றும் அவரது மனைவி குஷ்பு ஆகியோரை வீட்டில் சந்தித்தார். இந்த புகைப்படத்தை குஷ்பு தனத ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒன் 2 ஒன் படத்தில், ஹீரோவுக்கு இணையாக கதாபாத்திரம் வில்லனுக்கு இருப்பதால் என்பதால் அனுராக் காஷ்யபை நடிக்க வைத்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த கேள்வி பட்ட ரசிகர்கள் அப்போ படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என்று பேசிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X