இப்படி ஒரு படத்தை எடுப்பதே கஷ்டம்.. மஞ்சுவாரியர் நடித்த ‘ஃபுட்டேஜ்’ படத்தை பாராட்டிய அனுராக்!

சென்னை: மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்டபம் தான் 'ஃபுடேஜ்'. இப்படத்தில் இருந்து படுகவர்ச்சியான போஸ்டர் வெளியாகி இது இணையத்தில் பேசுபொருளானது. இத்திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தை பார்த்த அனுராக் காஷ்யப் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.

இதில், மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் நடித்துள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது.

footage manju warrior anurag kashyap

ஃபுட்டேஜ்: இந்த படத்தில் நாயர் விசாக்கை கதாநாயகி கட்டிப்பிடித்து இருப்பது போல அதிரடியான போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரைப் பார்த்த பலர் அது மஞ்சுவாரியர் என்றும், இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. கடைசியில் அது மஞ்சுவாரியர் இல்லை, இது காயத்ரி அசோக் என்பது தெரியவந்தது. அவர் பார்ப்பதற்கு மஞ்சு வாரியர் போல இருப்பதாலும், இந்த படத்தில் மஞ்சுவாரியர் நடித்து இருப்பதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டது.

பார்க்க பார்க்க பிடிக்குது: இப்படம் ஆகஸ்ட் 2ந் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டு படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இதில்,இந்த மாதிரியான படத்தை எடுப்பது மிகவும் கடினம். படக்குழு மிகப்பெரிய சோதனையை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை படத்தை பார்க்கும் போதும், இந்தப்படம் இன்னும் அதிகமாக பிடித்துக்கொண்டே செல்கிறது. இது மாதிரியான ஒரு படத்தை எடுப்பது மிகவும் கடினம். ஒளிப்பதிவு, திரைக்கதை , பின்னணி இசை, ஒலியமைப்பு என அனைத்துமே அற்புதமாக இருந்தன. இதுமாதிரி படமெடுக்க கூடுதலான நேரமெடுக்கும் என மனமார பாராட்டி உள்ளார்.

அனுராக் காஷ்யப்: பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளிவந்த 'கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்', ராமன் ராகவ் 2.0 போன்ற திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றன. இவர் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மகாராஜா படத்திலும் ஒரு அட்டகாசமான ரோலில் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X