»   »  நான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம்.... 'வடசென்னை'க்கு அனுராக் காஷ்யப் பாராட்டு!

நான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம்.... 'வடசென்னை'க்கு அனுராக் காஷ்யப் பாராட்டு!

Subscribe to Oneindia Tamil
வடசென்னை படத்துக்கு அனுராக் காஷ்யப் பாராட்டு- வீடியோ

சென்னை: தான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம் 'வடசென்னை' என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வடசென்னை'. விமர்சன ரீதியாக மாற்றுக் கருத்துகள் வந்தாலும், ஒரு திரைப்படமாக இது வெற்றி பெற்றிருக்கிறது.

Anurag Kashyap praises Vadachennai

இப்படத்தை பார்த்த பலர் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். இவர் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

வடசென்னை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அனுராக் காஷ்யப் கூறியிருப்பதாவது,

Anurag Kashyap praises Vadachennai

"நான் பார்த்த உண்மையான கேங்ஸ்டர் படம் வடசென்னை. வெற்றிமாறன் இதனை மிக எளிமையாக சாதித்து இருக்கிறார். தொடர்ச்சியாக அருமையாக படங்களை எடுப்பவர் நீங்கள். மிக சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் நீங்கள்.

ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, தனுஷ் மற்றும் செந்தில், ராஜன், பத்மா கதாபாத்திரங்களில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கண்ணன் கதாபாத்திரத்தில் (ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திரம்) நடித்த அந்த பையன், அன்புக்கு ஆதரவாக தனது தந்தையை எதிர்த்து நிற்கும் அந்த காட்சி... நிறைய இருக்கிறது பேசுவதற்கு".

Anurag Kashyap praises Vadachennai

இவ்வாறு அவர் பாராட்டியுள்ளார்.

இந்திய சினிமாவின் மிக முக்கிய கேங்க்ஸ்டர் படமாக கருதப்படுவது அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசிப்பூர். அப்படிப்பட்ட படத்தை எடுத்த அனுராக் காஷ்யப்பே வடசென்னை படத்தை பாராட்டியிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The famous bollywood actor Anurag Kashyap praised Vetrimaran for Vadachennai movie.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more