கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றேனா? பிரபல நடிகைக்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அதிரடி பதில்!

By

மும்பை: தன் மீது நடிகை பாயல் கோஷ் கூறியுள்ள பாலியல் புகார் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார்.

Recommended Video

Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil

தமிழில், தேரோடும் வீதியிலே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் பாயல் கோஷ்.

தெலுங்கில் ஓசரவல்லி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.

மீ டு அனுபவம்

மீ டு அனுபவம்

இவர், கடந்த சில நாட்களுக்கு முன், தனது மீ டு அனுபவம் பற்றி யார் பெயரையும் குறிப்பிடாமல் பரபரப்பு புகார் கூறியிருந்தார். அதில், இயக்குனர் ஒருவரை மும்பையில் உள்ள வீட்டில் சந்தித்தேன். நன்றாகப் பழகினார். அவர் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றபோது, என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆபாசப் படம்

ஆபாசப் படம்

திடீரென ஓர் ஆபாசப் படத்தை டிவியில் திரையிடத் தொடங்கினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர், சினிமாவில் இது ஒன்றும் புதிதில்லை. நான் அழைத்தால் பல பெண்கள் என்னைத் தேடி வந்து நேரத்தை செலவிடுவார்கள் என்றார். அங்கிருந்து நான் தப்பி வந்தேன். அதில் இருந்து மீள்வதற்கு எனக்கு ஒரு மாதம் ஆனது என்று கூறியிருந்தார்.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

இந்நிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னை கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார் என்று ட்விட்டரில் கூறியிருந்தார் பாயல் கோஷ். பாம்பே வெல்வெட் படம் உருவான நேரத்தில் இது நடந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார். (இந்தப் படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது). இதையடுத்து, பாயல் கோஷ் கூறியுள்ள புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.

குற்றமென்றால்

குற்றமென்றால்

இது தொடர்பாக சில ட்வீட்களை செய்துள்ள அனுராக் காஷ்யப் தன் மீதான புகார்களை மறுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என் மீதான குற்றச்சாட்டில் நீங்கள் என்னுடன் பணியாற்றியவர்களையும் பச்சன் குடும்பத்தினரையும் இழுக்க முயன்று தோல்வி அடைந்துள்ளீர்கள். மேடம், நான் இரண்டு முறை திருமணம் செய்துள்ளேன். அது என் குற்றமென்றால் ஏற்றுக்கொள்கிறேன்.

தவறாக நடந்ததில்லை

தவறாக நடந்ததில்லை

அதோடு நிறைய அன்பு செலுத்தியதையும் ஏற்றுக்கொள்கிறேன். யாரிடமும் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டது இல்லை. அது போன்ற செயல்களை ஊக்குவிப்பதும் இல்லை. உங்கள் வீடியோவை பார்க்கும்போது அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது
என்பது தெரிய வருகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் பேசி இருந்தாலும் இந்தியில் பதில் சொல்வதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார். அனுராக் காஷ்யப் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X