பாலியல் புகார் சொன்ன நடிகை.. 'இது மலிவான ஸ்டன்ட்..' அனுராக்கிற்கு ஆதரவு தெரிவித்த முதல் மனைவி!

By

மும்பை: நடிகை பாலியல் புகார் தெரிவித்த வழக்கில் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யபுக்கு அவர் மனைவி ஆதரவு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Nayanthara Villain Anurag Meetoo case • Payal Gosh | Filmibeat Tamil

இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

பாயல் கோஷ்

பாயல் கோஷ்

இவர் மீது நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாயல் கோஷ், சில தென்னிந்திய படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் கூறும்போது, 'சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன்.

தப்பி வந்தேன்

தப்பி வந்தேன்

அவர் பலரை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றபோது, என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பி வந்தேன் என்று கூறியிருந்தார். இது அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்று மறுத்துள்ளார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.

எவ்வளவு பொய்

எவ்வளவு பொய்

'என் முதல் மனைவி, இரண்டாவது மனைவி, என்னுடன் பணிபுரிந்த நடிகைகள், அல்லது பொதுவிலோ, தனிப்பட்ட முறையிலோ சந்திக்கும் பெண்கள் யாராக இருந்தாலும், இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் இல்லை அதை பொறுத்துக் கொள்வதும் இல்லை. உங்கள் வீடியோவை பார்க்கும்போது அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்பது தெரிய வருகிறது என்று கூறியிருந்தார்.

முதல் மனைவி ஆர்த்தி

முதல் மனைவி ஆர்த்தி

இந்நிலையில், அனுராக்கிற்கு நடிகைகள் டாப்ஸி, ராதிகா ஆப்தே, சுர்வீன் சாவ்லா உள்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருடைய முதல் மனைவி ஆர்த்தி பஜாஜும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நீங்கள் ராக்ஸ்டார் அனுராக். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கவும் தொடர்ந்து குரல் கொடுங்கள். இங்கு ஒற்றுமை இல்லை.

கோபத்தை ஏற்படுத்தியது

கோபத்தை ஏற்படுத்தியது

உலகம் தோல்வி அடைந்தவர்களால் இயங்குகிறது. மற்றவர்களை வெறுப்பதற்கு செலவிடும் சக்தியை ஆக்கப்பூர்வமாகச் செலவிட்டால், இந்த உலகம் சிறந்த இடமாக மாறும். இது மலிவான ஸ்டன்டாக இருக்கிறது. முதலில் இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பிறகு எனக்கு சிரிப்பு வந்தது.

உங்களை நேசிக்கிறோம்

உங்களை நேசிக்கிறோம்

இதை நீங்கள் கடந்து செல்லுங்கள். அது அவர்களின் நிலை. நீங்கள் உயரத்தில் இருங்கள். உங்கள் குரலை பயன்படுத்திக் கொண்டே இருங்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். இதையடுத்து மேலும் பல திரையுலகினரும் அனுராக் காஷ்யபுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X