பிராமணர்கள் மீது.. கடும் கோபம் கொண்ட மகாராஜா பட வில்லன்.. சர்ச்சையான இன்ஸ்டா போஸ்ட்

மும்பை: இந்தியாவில் சாதிகள் இல்லையென்றால் ஏன் பிராமணர்கள் பூலே படத்தின் மீது கோபப்படுகிறார்கள். சாதி இல்லை என்று கூறும் பிராமணர்கள் ஏன் கோபத்தில் கொந்தளிக்கிறீர்கள். ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் பூலே இன்னும் ஏன் பேசுபொருளாக இருக்கின்றனர் என பாலிவுட் இயக்குநர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இதையும் தாண்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிராமணர்கள் மீது யூரின் போவதாகவும் கடுமையான சொற்களால் திட்டயுள்ளார். இதனால், பிராமணர்கள் கொந்தளித்துள்ளனர்.

ரீலீஸ் தேதி மாற்றம்: இயக்குநர் அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள திரைப்படம் புலே. இப்படம் சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டதாகும். இப்படம் ஜோதிராவ் புலேவின் 198ஆவது பிறந்தநாளான ஏப்ரல் 11ஆம் 11ஆம் தேதி வெளியிட திட்டமிட்பபட்டது. ஆனால், வரும் 25ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மகராஷ்டிராவில் உள்ள பிராமணர் சமூகத்தினரை தவறாக இப்படத்தில் காட்டியிருப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவி்தது இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை கோரியுள்ளனர். இதனால், இப்பட்ததின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருக்கிறது இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியிருக்கிறது. மேலும், பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புலே படத்தின் தேதி மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

anurag-kashyap-says-brahmins-are-cursed-with-urine

பிராமணர்கள் கோபம்: புனே படத்தில் பிராமணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு தணிக்கை வாரியம் தெரிவித்திருக்கிறது. இதற்கு இயக்குநர் அனந்த் மகாதேவன் சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், படத்தில் 3000 ஆண்டுகளாக அடிமைப்பட்ட சமூகம் என்ற வசனத்தையும் மாற்ற தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்த தகவல் அறிந்த இயக்குநர் அனுராக் காஷ்யப் கடும் கோபத்துடன் தணிக்கை வாரியத்தை திட்டி சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. பாலிவுட்டில் இவரது போஸ்ட் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அனுராக் காட்டம்: புலே படம் சர்ச்சை தொடர்பாக பதிவிட்ட அனுராக், இந்தியாவில் சாதிய அமைப்புகள் இல்லை என்றால் ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலேவை பார்த்து பிராமணர்களுக்கு ஏன் கோபம் வருகிறது. இந்த படத்தை தணிக்கை குழுவை தாண்டி ஒரு தனிப்பட்ட குழுவினர் படத்தை பார்த்து முடிவு செய்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். இங்கு சாதி இல்லை என்று சொன்னால் ஜோதிபாவும் சாவித்ரி புலேவும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் என்ன? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது. இப்படி இன்னும் எத்தனை படங்களை முடக்கியுள்ளார்கள் என தெரியவில்லை. சாதி இல்லையென்றால், நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆனீர்கள். அல்லது மோடி சொன்ன பார்ப்பனியம் ஒழிந்துவிட்டதா? திரைப்பட சான்றிதழ் வாரியம் ஒரு மோசடி அமைப்பு என அனுராக் காஷ்யப் காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

anurag-kashyap-says-brahmins-are-cursed-with-urine

மோசமான வார்த்தை: இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என கூறியுள்ளார். மேலும், பார்ப்பணர்கள் மீது கடும் கோபம் கொண்டுள்ள இயக்குநர் அனுராக் காஷ்யப், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ப்பணர்கள் மீது யூரின் போவேன் என கடுமையான சொற்களால் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது கோபம் நியாயமானது அதை ஏற்கிறோம். ஆனால், ஒரு சமூகத்தை இவ்வளவு கேவளமாக பேசுவது முறையற்றது. அனுராக் போதையில் எழுதியிருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X