சுஷாந்த் சிங் ரொம்ப பிரச்சனையான ஆள்.. ஜூன் 14ம் தேதி சாட் பண்ண மெசேஜ்களை வெளியிட்ட அனுராக் கஷ்யப்
மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேனேஜரிடம் சாட் செய்த வாட்ஸப் மெசேஜ்களை தற்போது வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
கடந்த மே 22ம் தேதியும், சுஷாந்த் சிங் மரணித்த ஜூன் 14ம் தேதியும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மேனேஜரிடம் தான் செய்த வாட்ஸப் மெசேஜ்கள் இதுதான் என்பதை தற்போது வெளியிட்டுள்ளார் அனுராக் கஷ்யப்.

ரியாவுக்கு ஆதரவு
நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் இயக்குநர் அனுராக் கஷ்யப். பாலிவுட்டில் நடிகை டாப்சி, வித்யா பாலன் உள்ளிட்ட சிலர் மட்டுமே ரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ரியாவின் ரத்தத்தை உறிஞ்சுவதாக அவர் போட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பியது.

படம் பண்ண கேட்டார்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேனேஜர், கடந்த மே 22ம் தேதி தன்னிடம் வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு படம் பண்ணும் படி கேட்டார் என்றும், அதற்கு நடிகர் சுஷாந்த் சிங் ரொம்ப பிரச்சனையான ஆள், அவருடன் படம் பண்ண தனக்கு விருப்பம் இல்லை என்று தான் செய்த மெசேஜ்களை பதிவிட்டு, இப்போது இதனை வெளியிடுவதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், இதற்கு மேலும், இதனை மூடி மறைத்து வைக்க முடியாது என்றுள்ளார்.

ஜூன் 14
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அறிவிக்கப்பட்ட ஜூன் 14ம் தேதியும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேனேஜருடன் செய்த வாட்ஸப் சேட்களை பதிவிட்டு தற்போது புதிய சர்ச்சைகளை கிளப்பி உள்ளார் அனுராக் கஷ்யப். பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவருடன் கூட்டணி வைத்த படத்தில் இருந்து சுஷாந்துக்காக விலகினேன். ஆனால், சுஷாந்த் என்னை கழட்டிவிட்டு பயமுறுத்தி விட்டார் என அந்த சாட் செய்துள்ளார்.

சுஷாந்தை வில்லனாக்க
நடிகை டாப்சி, அனுராக் கஷ்யப் போன்ற பிரபலங்கள் திடீரென ரியா சக்கரவர்த்திக்கும் ஆதரவாகவும், சுஷாந்த சிங் ராஜ்புத்தை வில்லனாக்குவது போலவும் ஏன் நடந்து கொள்கின்றனர். உங்களை யார் இயக்குகின்றனர் என்ற கேள்விகளை அவரது ட்வீட்டுக்கு கீழே ஆயிரக் கணக்கான ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











