ஒரு ட்வீட் போட ரூ. 30 கிடைக்குமா?: சவ்கிதார்களை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குநர்
மும்பை: ஏம்பா, சவ்கிதார்களா ஒரு ட்வீட் போட ரூ. 30 கிடைக்குமா என்று கேட்டு விளாசியுள்ளார் பாலிவுட் இயக்குரும், நடிகருமான அனுராக் கஷ்யப்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று திரையுலக பிரபலங்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு பாஜக ஆதரவாளர் ஒருவர் பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப்புக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அந்த மெசேஜை அனுராக் கஷ்யப் ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார்.
அனுராக் கஷ்யப்
அனுராக் கஷ்யப் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்ட மெசேஜை பார்த்த சவ்கிதார்கள் அவரை விளாசினார்கள். கஷ்யப் ஏற்கனவே சவ்கிதார்களை ட்விட்டரில் வறுத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டல்
சவ்கிதார்கள் தன்னை கிண்டல் செய்வது, விளாசுவது காமெடியாக உள்ளது என்று கூறி பொசுக்கென்று அசிங்கப்படுத்திவிட்டார் அனுராக் கஷ்யப். நிறைய பேர் கண்டல் செய்தால் பயப்படுவோம் என்று நினைக்கிறார்கள் போன்று என்கிறார் அவர்.
சவ்கிதார்கள்
பாவம் சவ்கிதார்கள். இரண்டு நாளுக்கு ஒரு முறை ட்விட்டர் பக்கம் வருபவரை கலாய்த்து ஏன் நேரத்தை வீண்டிக்க வேண்டும்? தற்போது எல்லாம் என்ன ரேட்? ஒரு ட்வீட்டுக்கு 30 ரூபாயா அல்லது இது தேர்தல் நேரம் என்பதால் கூடுதலாக கொடுக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அனுராக் கஷ்யப்.
கத்காரி
பாஜகவில் மோடிக்கு சிறந்த மாற்று கத்காரி. இந்திய அரசியலில் இருந்து ஊழலை அகற்ற முடியாது. எல்லாமே ஒன்று தான். ஆனால் மதவாதம், வெறுப்பு மற்றும் பய அரசியலை அகற்றலாம் என்கிறார் அனுராக்.


Click it and Unblock the Notifications











