தமன்னாவின் முன்னாள் காதலருடன் சேர்ந்து நடிகரின் காலில் விழுந்த அனுராக்.. ஓங்கி அடிவிட்ட நடிகர்!
மனோஜ் பாஜ்பாயின் புதிய திரைப்படமான 'ஜுக்னுமா' படத்திற்கான பிரீமியர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. ராம் ரெட்டி இயக்கிய இந்தப் படத்தில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும், இந்தப் படத்தில் மனோஜ் பாஜ்பாயின் நடிப்புடன், விழாவில் நடந்த ஒரு நிகழ்வு பெரிதும் பேசப்பட்டது. மனோஜைக் கண்டதும் உடன் இருந்த பல நடிகர்கள் அவரது காலில் விழுந்து, தொட்டு வணங்கினர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரீமியர் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், ஜெய்ஜீப் அஹ்லாவத், நடிகரும் நடிகை தமன்னாவின் முன்னாள் காதலருமான விஜய் வர்மா மற்றும் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக மனோஜ் பாஜ்பாயின் கால்களில் விழுந்தனர். இவர்கள் மூவரும் இப்படி செய்ததும் மனோஜ் சற்று உணர்ச்சிவசப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் தனது நெருங்கிய நண்பரான அனுராக் காஷ்யப்பை அவர் செல்லக் கோபத்தில் ஒரு அடியும் வைத்துவிட்டார்.
'தி ஃபேமிலி மேன்' தொடரில் மனோஜுடன் நடித்த ராஜ் நிடிமோருவும் நகைச்சுவையாக ஓடி வந்து மனோஜ் பாஜ்பாயின் கால்களில் விழுந்தார். இந்தச் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. பலரும் இது அவர்கள் மிகவும் ஜாலியான ஒரு செயல் என்றும் சிலர் நடிகர்களுக்கு இடையில் இப்படி ஒரு மரியாதையா என்றும் பேசி வருகிறார்கள்.

மனோஜ் பாஜ்பாய் மற்றும் அனுராக் காஷ்யப் இடையேயான நட்பு பாலிவுட் திரையுலகில் ஒரு தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. இவர்களின் நட்பு 90களின் பிற்பகுதியில் தொடங்கியது. அனுராக் காஷ்யப் ராம் கோபால் வர்மா இயக்கிய 'சத்யா' (1998) திரைப்படத்திற்கு எழுத்தாளராகப் பணியாற்றினார். அப்படத்தில் மனோஜ் பாஜ்பாயி பிகு மாத்ரே என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் இருந்து தொடங்கியதுதான் இவர்களின் நட்பு.
நட்பு: பின்னர் இருவரும் 'கேங்ஸ் ஆஃப் வசேபூர்' (2012) படத்தில் இணைந்து பணியாற்றினர். கடந்த ஆண்டு 'பையா ஜி' படத்தின் விளம்பரத்தின்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் இருவரது நட்பும் முறிந்துவிட்டது என்று கூட சிலர் பேசி வந்தார்கள். இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, மனோஜ் பாஜ்பாயி, அது ஒரு சிறிய தவறான புரிதல் மட்டுமே என்று விளக்கினார்.
மனோஜ் கொடுத்த விளக்கம்: சமீபத்தில் பாலிவுட் ஹங்காமா உடனான ஒரு நேர்காணலில், மனோஜ் அனுராக் காஷ்யப்பை புகழ்ந்து பேசினார். "இந்திய திரையுலகில் அனுராக் தனது சிந்தனையாலும், உறுதியாலும் இந்த நிலையை அடைந்துள்ளார். இந்த பயணத்தில் பல எதிரிகளை அவர் சம்பாதித்துள்ளார். நான் அவரை விடப் பல விஷயங்களில் யதார்த்தமானவன். ஆனால் எங்கள் இருவரின் இயல்பிலும் கோபத்தின் சாயல் உள்ளது" என்றார்.
ரசிகர்கள் மனநிலை: 'ஜுக்னுமா' படத்தின் பிரீமியர் நிகழ்வு ஒரு பட வெளியீடாக மட்டும் இல்லாமல், திரையுலகில் உள்ள நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு தளமாகவும் அமைந்தது. ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமாகவே பார்க்கப்படுகிறது. இது மட்டும் அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











