»   »  ரேகாவுக்கு இவ்வளவு பெரிய மகளா?: அவரும் நடிக்க வருகிறாரா?

ரேகாவுக்கு இவ்வளவு பெரிய மகளா?: அவரும் நடிக்க வருகிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரேகா மகள் அனுஷா நடிக்க வருகிறாரா?- வீடியோ

சென்னை: நடிகை ரேகாவின் மகள் அனுஷா தாய் வழியில் நடிக்க வரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து ரேகா விளக்கம் அளித்துள்ளார்.

கடலோரக் கவிதைகள், புன்னகை மன்னன் என்று ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரேகா. தற்போது அம்மா கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேகாவின் மகள் அனுஷா நடிக்க வரப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ரேகா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என ரேகா கூறியுள்ளார்.

மகள்

மகள்

என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் ரேகா.

நன்றி

நன்றி

இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரேகா.

வாரிசு

வாரிசு

ரேகாவின் மகள் அனுஷாவின் புகைப்படம் அண்மையில் வெளியானது. இதையடுத்தே அவர் நடிக்க வருவதாக வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Rekha has released a statement about her daughter Anusha following her in career. She rubbished the rumours that Anusha is getting ready to enter film industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil