Shame Review: 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம்.. மனைவிக்கு தெரியாமல் கள்ள உறவு..ஷேம் ஷார்ட் பிலிம் ரிவ்யூவ்!

சென்னை: ஓடிடி தளங்களில் படங்கள் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து பெரும்பாலான படங்களுக்கான அங்கீகாரமும் வெற்றியும் பாராட்டும் ஓடிடி தளத்தில்தான் கிடைக்கின்றன. பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் முக்கியம்தான் என்றாலும் படக்குழுவினருக்கு மிகவும் முக்கியமான விஷயம், படத்தை மக்கள் சரியாக புரிந்து கொண்டார்களா? அதனை அங்கீகரிக்கின்றார்களா என்பதுதான். அந்த இடத்தை அதற்கான காலத்தை ஓடிடி தளங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. ஓடிடி தளங்களில் படங்கள் மட்டும் இல்லாமல், குறும்படங்கள், ஆவணப்படங்கள், விழாக்கள், நிகழ்ச்சிகள் என பல வகையானவை ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளன. அப்படி இருக்கும்போது, அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டுள்ள Shame என்ற குறும்படத்தின் விமர்சனம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் அனுஷா போஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள Shame குறும்படத்தில் ஸ்வாரா பாஸ்கர், ரன்வீன் ஷோரே, சயானி குப்தா, சைரஸ் சாஹுகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தம் 25 நிமிடங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. 2018ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த குறும்படம் உயர்தர 5 நட்சத்திர விடுதியில், ஹவுஸ் கீப்பிங்காக பணி புரியும் பெண்ணை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Anusha Bose Shame Short Film Review Swara Bhaskar Amazone Prime Video

மிகவும் நேர்மையாக ஹவுஸ் கீப்பிங் பணியினைச் செய்து வரும் அந்த பெண், தனக்கு ஏற்பட்ட சின்ன ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு விஷயத்தைச் செய்கின்றார். அதனால் அவர் தனது வேலையை இழக்கும் நிலைக்குச் செல்கின்றார். இப்படியான நிலையில் வேலையை விட்டு நீக்கப்படும்போது, அவரை உதாசினப்படுத்துகின்ற, கேவலப்படுத்துகின்ற வார்த்தைகளை கூறிவிடுகின்றார்கள், அதற்கு அவர் எப்படி பழி வாங்குகின்றார் என்பதுதான் மொத்த கதையும்.

திரைக்கதை: ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருக்கும் ஸ்வரா பாஸ்கர், ஒரு அறையை சுத்தம் செய்ய உள்ளே நுழைகின்றார். அப்போது அந்த அறையில் இருக்கும் இருவர் மிகவும் நெருக்கமாக இருக்கின்றார்கள். உடனே கதவை மூடும் ஸ்வாரா பாஸ்கர், அவர்கள் நெருக்கமாக இருப்பதை பார்க்கின்றார். அதன் பின்னர் அந்த அறையினை அவர் சுத்தம் செய்யப் போகும்போது, அறை உள்ளதைப் பார்த்து, தனது கற்பனையில் அவர்கள் இருவரும் எப்படியெல்லாம் நெருக்கமாக இருந்திருப்பார்கள் என யோசித்துப் பார்க்கின்றார். மேல் தட்டு வர்கத்தைச் சார்ந்தவர்களின் உடலுறவு எப்படியெல்லாம் இருக்கும் என அவர் யோசித்துப் பார்க்கும் விதமாக காட்சிகளை அமைத்துள்ளார்கள்.

Anusha Bose Shame Short Film Review Swara Bhaskar Amazone Prime Video

வேசி: அறையில் ஆணுறை எல்லாம் உள்ளது, தலையணை உறையில் லிப்ஸ்டிக் கறை ஒட்டியுள்ளது. உள்ளே இருந்த பெண் கழட்டிப்போட்ட அவரது ஆடையை பார்த்ததும் ஸ்வரா பாஸ்கர் தான் அணிந்து பார்க்கலாம் என அணிந்து பார்த்துக் கொண்டு இருக்கும்போது, அந்த அறையில் இருந்த ஆண் உள்ளே வருகின்றார். இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளிக்க, ஸ்வாரா பாஸ்கர் வேலையை விட்டு நீக்கப்படுகின்றார். அப்போது அந்த ஆண், ஸ்வாரா பாஸ்கரை வேசி என திட்டுகின்றார். ஆனால் அந்த அறையில் அந்த ஆண் அவரது மனைவி இல்லாமல், வேறு ஒரு பெண்ணுடன்தான் நெருக்கமாக இருந்தார்.

Anusha Bose Shame Short Film Review Swara Bhaskar Amazone Prime Video

பழிவாங்கல்: தனது மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு, தன்னை வேசி எனத் திட்டியவனை பழிவாங்கவேண்டும் என ஸ்வாரா பாஸ்கர் என்ன செய்தார் என்பது மீதிக்கதை. 25 நிமிட குறும்படத்தில் எவ்வளவு தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லமுடியுமோ அதனைச் சொல்லியுள்ளார், இயக்குநர் அனுஷா போஸ். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது. இந்த குறும்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X