'நேரம்' நஸ்ரியா கேரக்டரில் கன்னட நடிகை அனுஷா- தெலுங்கு ரீமேக்கில்!
சென்னை: தமிழ், மலையாளம் என குறுகிய காலத்தில் பிரபலமாகி டக்கென்று திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நடிகை நஸ்ரியா நேரம் படத்தில் நடித்த கேரக்டரில் தெலுங்கில் நடிக்க புதுமுக நடிகை அனுஷா தேர்வாகியுள்ளார்.
நடிகை நஸ்ரியா "நேரம்" படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு ஹிட்டாக அமைந்தது.
அடுத்தடுத்து படங்கள் தேடி வந்த நிலையிலும் திடீரென்று மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்து இல்லறத்தில் செட்டிலானார்.
தெலுங்கில் ரீமேக்:
தமிழில் நேரம் வெளியாகி 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ரீமேக் ஆகிறது. ஹீரோவாக சுதீப் கிஷன் நடிக்கிறார். நஸ்ரியா வேடத்தில் நடிக்க ஹீரோயின்கள் தேர்வு நடந்து வந்தது.
கல்லூரி மாணவி வேடம்:
தற்போது அந்த பாத்திரத்திற்கு கன்னட நடிகை அனிஷா அம்புரோஸ் தேர்வாகி இருக்கிறார்.இது பற்றி அனிஷா, "இப்படத்தில் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். கல்லூரி மாணவியாக இதில் நான் நடித்தாலும் கதாபாத்திரத்தில் என்னுடைய ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
நேரம் பார்த்து கத்துக்க போறேன்:
இதனால் நேரம் படத்தை பார்க்க உள்ளேன். அதில் ஹீரோயின் நஸ்ரியா நடித்திருக்கும் ஸ்டைலை உன்னிப்பாக கவனித்து குறிப்பு எடுத்துக்கொண்டு அத்துடன் எனது ஸ்டைலை கலந்து நடிப்பேன்.
பயிற்சி முக்கியம்:
சில சமயம் கதாபாத்திரங்கள் பார்ப்பதற்கு எளிதானதாக தோன்றலாம். எந்த வகையான பாத்திரமாக இருந்தாலும் அதற்காக பயிற்சி எடுத்து நடிக்க வேண்டும் என்பது என் பாலிசி" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











