கேரளாவுக்கு உதவும் அனுஷ்கா ஷர்மா, விராட் கோஹ்லி
மும்பை: நடிகை அனுஷ்கா ஷர்மா கணவர் விராட் கோஹ்லியுடன் இணைந்து கேரளாவுக்கு உதவியுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.

கேரளாவை மீட்டெடுக்க பலரும் உதவி வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்பட பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். இப்போது அந்த பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இணைந்துள்ளார்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் அவரது கணவர் விராட் கோஹ்லியும் இணைந்து கேரளாவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். நிதியளித்ததோடு மட்டுமல்லாமல், கேரளாவில் உள்ள அரசு சாரா அமைப்புடன் இணைந்து கேரள மக்களின் மறுவாழ்வுக்கு உதவி வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல், அங்கு பாதிக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கும், மருத்துவ உதவியும், உணவும் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். கேரளா வன விலங்குகளுக்கு பெயர்பெற்ற மாநிலம் என்பதால் அங்குள்ள விலங்குகளை பாதுகாப்பது அவசியம் எனக் கூறி, ஒரு லாரியில் மருத்துவக்குழுவுடன் மருந்துப்பொருட்களையும் அனுப்பியுள்ளனராம்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியை கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











