ரொமான்ஸ் பொங்கும் காதல் கதையில் இளம் வயது நடிகருக்கு ஜோடியாகும் அனுஷ்கா.. புகையும் சர்ச்சை!

சென்னை: நடிகை அனுஷ்கா ஷெட்டி இளம் வயது நடிகருக்கு ஜோடியாக காதல் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்தார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பட்டையை கிளப்பி வந்தார். தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, அஜித், விக்ரம், ஆர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மிரட்டல் படங்கள்

மிரட்டல் படங்கள்

அருந்ததி, ருத்மாதேவி, பாகுபலி என மிரட்டல் படங்களையும் கொடுத்துள்ளார் அனுஷ்கா. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான சைலன்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப் பெறவில்லை.

இளம் வயது இளைஞருடன்

இளம் வயது இளைஞருடன்

இந்நிலையில் காதல் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் நடிகை அனுஷ்கா. இந்தப் படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞருடன் காதல் கொள்வது போன்ற கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

'மிஸ் ஷெட்டி -மிஸ்டர் பாலிஷெட்டி

'மிஸ் ஷெட்டி -மிஸ்டர் பாலிஷெட்டி

இப்படத்தை மகேஷ் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். இந்தப்படத்திற்கு 'மிஸ் ஷெட்டி -மிஸ்டர் பாலிஷெட்டி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Uppena Review | VijaySethupathi, VaishnavTej, Krithi Shetty, BujjiBabu Sana | Netflix
சர்ச்சசைகளை சந்திக்கும்

சர்ச்சசைகளை சந்திக்கும்

நாயகன் நவீனுக்கு 31 வயது என்பதும் அனுஷ்கா ஷெட்டிக்கு 39 வயது என்பதும், இந்த வயது வித்தியாசம் கதைக்கு மிக பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் நிச்சயம் இந்த படம் பல சர்ச்சசைகளை சந்திக்கும் என்று இப்போதே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அழுத்தமான கதாப்பாத்திரம்

அழுத்தமான கதாப்பாத்திரம்

அதேநேரத்தில் படத்தில் அனுஷ்காவின் கதாப்பாத்திரம் பேசும் படியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வித்தியாசமான மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரம் என்பதாலேயே இந்தப் படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X