கௌதம் மேனன் படத்தில் நடிக்கவிருக்கும் 'தேவசேனா'!
சென்னை : கௌதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. கௌதம் மேனன் சில திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார்.
இதற்கிடையே கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு கௌதம் மேனனுடன் அனுஷ்கா இணையும் இரண்டாவது படம் இது.

பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அனுஷ்கா நடிப்பது உண்மை என்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் வித்தியாசமான கதை இது எனவும் கூறுகின்றனர்.
அனுஷ்கா, பெண்ணுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தனியாளாக தூக்கி நிறுத்தக் கூடிய நடிப்புத் திறமை உள்ளவர் என்பது 'அருந்ததி' உள்ளிட்ட அவரது கடந்தகாலப் படங்கள் மூலமே தெரியவரும்.

'பாக்மதி' படத்தில் பிஸியாக நடித்துவரும் அனுஷ்கா அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 'பாக்மதி' படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அடுத்து கௌதம் மேனன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











