பொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா?

By Siva

Recommended Video

Ponniyin Selvan Movie: பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா- வீடியோ

சென்னை:பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை இயக்கத் தயாராகி வருகிறார். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக கீர்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின.

Anushka is approached for Ponniyin Selvan

பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் உள்ளாராம். அதனால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதையடுத்து பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவை அணுகி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதியும் டேட்ஸ் பிரச்சனையால் தான் இந்த படத்தில் இருந்து விலகினார்.

படப்பிடிப்பை துவங்க மணிரத்னம் ஏற்பாடுகள் செய்து வருகிறார். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கக் கூடாது. அதுவும் மணி சார் ஸ்டைலுக்கு அது செட்டாகாது என்று ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் மணிரத்னத்தின் நடிகர்கள், நடிகைகள் தேர்வு சரியில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X