இரண்டே இரண்டு காரியம் செய்து சிங்கத்தை சாச்சுப்புட்ட அனுஷ்கா

By Siva

சென்னை: நடிகை அனுஷ்கா ஒரு ஸ்வீட்டி என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படம் மூலம் முதன்முதலாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார் அனுஷ்கா. அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து சிங்கம் 2 படத்தில் நடித்தார். தற்போது எஸ் 3 படத்திலும் அவர்கள் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் அனுஷ்கா பற்றி சூர்யா கூறுகையில்,

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா நிஜ வாழ்க்கையில் ஒரு ஸ்வீட்டி. (அனுஷ்காவின் இயற்பெயர் ஸ்வீட்டி என்பது குறிப்பிடத்தக்கது.) அவரை நான் முதன்முதலாக பார்த்தபோது இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சூர்யா

சூர்யா

சிங்கம் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய தினம் எனக்கு திருமண நாள். அனுஷ்காவை அன்று தான் முதன்முதலாக பார்த்தேன். அவர் என்னவென்றால் ஒரு போர்டில் ஜோ மற்றும் என்னுடைய புகைப்படங்களை ஒட்டி படக்குழுவினரிடம் கையெழுத்து வாங்கி அதை கொடுத்து வாழ்த்தினார்.

கார்

கார்

சிங்கம் 3 படப்பிடிப்பின்போது டிரைவர் ஒருவர் தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்த அனுஷ்கா அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார் என்றார் சூர்யா.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சூர்யா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X