அவனுங்களுக்கு கொடூரமான தண்டனை கொடுக்கணும்.. கொதித்தெழுந்த பிரபலங்கள்

ஹைதராபாத்: பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.

ஹைதராபாத் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற குற்றவாளிகள் சிசிடிவி கேமரா உதவியுடன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த குற்றவாளிகளுக்கு, காலம் தாழ்த்தாமல், உடனடியாக கொடூர தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகைகள் அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, வேதிகா, அக்‌ஷய் குமார் என நாடு முழுவதும் பல பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொடூரமா தண்டிக்கணும்

என்ன செய்வதென்றே தெரியவில்லை, கோபமாக வருகிறது, மிகவும் ஆழ்ந்த மன உளைச்சலுடன் இருக்கிறேன். அந்த குற்றவாளிகளுக்கு உடனடியாக எந்த ஒரு கருணையும் காட்டாமல் கொடூர தண்டனை வழங்கவேண்டும். இனி ஒருத்தனும் இப்படி ஒரு தப்பு செய்யக் கூடாதுன்னு அலறி நடுங்கணும் என நடிகை வேதிகா தனது கோபத்தையும் தாங்க முடியாத துயரத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கடுமையான சட்டம் வேண்டும்

ஹைதராபாத் பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமை, தமிழ்நாட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமை மற்றும் ராஞ்சியில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம், இதையெல்லாம் பார்க்கும் போது, நாம் ஒரு சமூகமாக வாழ்வதையே இழந்து வருவதாக தோன்றுகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு நிர்பயாவுக்கு நடந்தது மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்வீட் செய்துள்ளார்.

கோபமா வருது

ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை ஹன்சிகா, என் நெஞ்சில் ரத்தம் கசிகிறது. ரொம்ப கோபமா வருது, இந்த கொடூர செயலை கண்டிப்பது மட்டும் போதாது, ஹைதராபாத் பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

சிரஞ்சீவி கண்டனம்

ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு உடனடியாக உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அவர்களை நடுத்தெருவில் தூக்கில் போட்டால் கூட தப்பில்லை என்றும் வீடியோ வெளியிட்டு நடிகர் சிரஞ்சீவி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான இடமில்லை

ரொம்ப கொடூரமான செயல், பெண்களுக்கு பாதுகாப்பான இடமே இல்லையா, தினம் தினம் பெண்கள் இப்படி பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் முக்கியம் என நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார்.

மிருகங்களும் வெட்கப்படும்

இப்படியொரு கொடுமையை செய்ய மிருகங்களும் வெட்கப்படும், ஒன்றுமே அறியாத பிரியங்கா ரெட்டியை இப்படி பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்களே என நடிகை அனுஷ்கா தனது கண்டனத்தையும், ஹைதராபாத் பெண் மருத்துவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X