அனுஷ்காவின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன்
சென்னை: இரண்டாம் உலகம் படத்தில் தானே டப்பிங் பேச வேண்டும் என்ற அனுஷ்காவின் ஆசையை இயக்குனர் செல்வராகவன் நிறைவேற்றியுள்ளார்.
ஆர்யா, அனுஷ்காவை வைத்து செல்வராகவன் எடுத்துள்ள படம் இரண்டாம் உலகம். இந்த படத்தில் 2 கெட்டப்பில் வரும் அனுஷ்காவுக்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்று ஆசை வந்துள்ளது.
அனுஷ்கா ஆள் அழகானவர் என்றாலும் குரல் கரகரப்பானது. அதனால் தான் ஆரம்ப காலத்திலேயே டப்பிங் பேச அவர் விருப்பம் தெரிவித்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அனுஷ்காவின் டப்பிங் ஆசை நிறைவேறாமல் இருந்தது.

நான் டப்பிங் பேசட்டுமா?
இரண்டாம் உலகம் படத்தில் எனக்கு நானே டப்பிங் பேசட்டுமா என்று அனுஷ்கா செல்வராகவனிடம் கேட்டுள்ளார்.

தாராளமாக பேசுங்க
அனுஷ்கா கேட்டவுடன் தாராளமாக நீங்களே இந்த படத்தில் டப்பிங் பேசுங்கள் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

அழைப்புக்காக காத்திருக்கும் அனுஷ்கா
செல்வராகவன் ஓகே சொன்னதும் அனுஷ்கா தனது தமிழ் உதவியாளர்களிடம் தான் உச்சரிக்க திணறும் தமிழ் வார்த்தைகளை சரியாக பேச கற்றுக் கொண்டுள்ளாராம். செல்வா எப்பொழுது டப்பிங் பேச அழைப்பார் என்று அவர் காத்துக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











