»   »  என்னாது அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் திருமணமா?: அப்போ அந்த பொண்ணு?

என்னாது அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் திருமணமா?: அப்போ அந்த பொண்ணு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அனுஷ்கா பிரபாஸை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி என்றால் பிரபாஸுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கதி என்ன என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

யோகா டீச்சராக இருந்த அனுஷ்காவுக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தது தெலுங்கு திரை உலகம் தான். அதன் பிறகு அவர் ரெண்டு படம் மூலம் கோலிவுட் வந்தார். பாலிவுட் செல்லும் ஆசை எல்லாம் தனக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அனுஷ்காவுக்கு வீட்டில் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

பாகுபலி

பாகுபலி

பாகுபலி படத்தில் நடிக்கையில் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது என்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் தெலுங்கு திரை உலகில் பேசப்படுகிறது.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது வீட்டில் பல மாதங்களாக வற்புறுத்தி வந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பிரபாஸ்

பிரபாஸ்

35 வயதாகும் பிரபாஸுக்கு அவரது பெற்றோர் 22 வயது பெண்ணை பார்த்துள்ளதாகவும் வரும் டிசம்பர் மாதம் அவர்களுக்கு திருமணம் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி மேல் செய்தி வெளியானது.

அந்த பெண்?

அந்த பெண்?

பாகுபலி படத்தை முடிக்கவே பிரபாஸ் தனது திருமணத்தை தள்ளிப் போட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் என்றால், அவரது பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணின் நிலை என்ன என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

English summary
Buzz is that Anushka is set to marry Baahubali star Prabhas. Earlier it was told that Prabhas will marry a 22-year old girld of his parents' choice in december.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil