Anushka Shetty: திருமணம் எப்போது.. முதல்முறையாக அனுஷ்கா ஓபன் டாக்!

ஐதராபாத்: நடிகை அனுஷ்கா தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அனுஷ்கா.

தற்போது அவரது நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

Anushka opens up about her marriage for the first time in media

திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய அனுஷ்கா: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, அஜித் என முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா, நடிப்பில் இறுதியாக பாகுபலி 2 படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அவரது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் ரிலீசாகியுள்ளது. என்டர்டெயின்மெண்ட் ஜானரில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

படத்தில் அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். முரளி ஷர்மா, நாசர், துளசி, ஜெயசுதா உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 7ம் தேதி ஷாருக்கானின் ஜவான் படத்துடன் இந்தப் படமும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை அதிகமாக பெற்றுள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து பாகமதி என்ற படத்தில் நடிக்கவிருந்த நிலையில், படங்களில் நடிக்காமல் தவிர்த்தார் அனுஷ்கா. இந்நிலையில் இந்த மூன்று ஆண்டு இடைவெளி தனக்கு தேவைப்பட்டதாகவும் தற்போது தான் மிகவும் தெளிவுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருவதாகவும் அனுஷ்கா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நல்ல கதைகள் அமைந்தால் எந்த மொழிப் படமாக இருந்தாலும் நடிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் தன்னுடைய 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார் அனுஷ்கா. தற்போது 41 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார். அவரது அடுத்தப்படம் எப்போது என்று கேட்பதை காட்டிலும் அவரது திருமணம் எப்போது என்ற கேள்விகளையே அவர் அதிகமாக எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்யில் தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஐதராபாத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திருமணம் என்பது இயல்பாக நடக்க வேண்டும் இதுகுறித்த கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அதற்கான நேரம் வரும்போது அது கண்டிப்பாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அது அமையும்போது அனைவருடனும் பகிர்ந்து கொள்வேன் என்றும் அனுஷ்கா மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X