Don't Miss!
- News
ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு..காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்த கமல்ஹாசன்
- Lifestyle
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Sports
"பும்ரா எங்கதான் சார் இருக்கார்?" கம்பேக் தேதியை அறிவித்த ரோகித் சர்மா.. ரசிகர்கள் குழப்பம்- விவரம்
- Technology
இதே வேலையா போச்சு: ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய Airtel.! கடுப்பில் பயனர்கள்!
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Finance
நிறுவனங்கள் உங்கள் குடும்பமல்ல.. நீங்கள் குடும்ப உறுப்பினருமல்ல.. இனி பணத்துக்காக வேலை பாருங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சந்திரமுகியாக மிரட்டப்போகும் அனுஷ்கா? தீயாய் பரவும் தகவல்.. இயக்குநர் பி வாசு விளக்கம்!
சென்னை: சந்திரமுகி 2 படத்தில் அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து இயக்குநர் பி வாசு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, மாளவிகா, நாசர், வடிவேலு. வினீத் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
பிக்பாஸில் அடுத்த மாஸ் என்ட்ரி இவரா.... மாஸ்டர் பட நடிகருக்கு குவியும் வாழ்த்துக்கள்
இந்தப் படத்தை பி வாசு இயக்கியிருந்தார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது.

ஹீரோவாக நடிகர் லாரன்ஸ்
இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். சந்திரமுகி படத்தில் சந்திரமுகியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். அவரது மிரட்டலான நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.

அனுஷ்கா சந்திரமுகி கதாப்பாத்திரம்?
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நடிகை அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அனுஷ்கா சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பி.வாசு விளக்கம் அளித்துள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கும் போது முடிவு
அதாவது, ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் பேசி வருகிறோம். சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்க உள்ளாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்
இதனால் சந்திரமுகி 2 படத்தில் அனுஷ்கா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அனுஷ்கா நடிப்பில் வரலாற்று படங்கள்
மேலும் வரலாற்று படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அனுஷ்கா. அவரது நடிப்பில் வெளியான அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி ஆகிய படங்கள் பெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
-
ஷாக்கிங்.. 26 வயது இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மரணம்.. சோகத்தில் சாந்தனு
-
அதிர்ச்சி.. இயக்குநரும் குணசித்திர நடிகருமான ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
-
அதுக்குதான கொடுக்குறாங்க துட்டு... பாக்ஸ் ஆபிஸ் கவலை ரசிகர்களுக்கு எதுக்கு..?: விளாசிய ஆர்ஜே பாலாஜி