காதல் இல்லாமலா அனுஷ்காவும், பிரபாஸும் இப்படி செய்தார்கள்?

By Siva

Recommended Video

காதல் இல்லையா!!.. அப்புறம் என்ன?- வீடியோ

ஹைதராபாத்: காதல் இல்லாமலா இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று பிரபாஸ், அனுஷ்கா பற்றி ரசிகர்கள் மீண்டும் பேசத் துவங்கிவிட்டனர்.

பாகுபலி படப்பிடிப்பில் கலந்து கொண்டதில் இருந்து அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக பேசப்படுகிறது. இது குறித்து அனுஷ்கா கண்டுகொள்ளவே இல்லை.

காதல் எல்லாம் இல்லை நாங்கள் நல்ல நண்பர்கள் என்று பிரபாஸ் கூறுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

திருமணம்

திருமணம்

திரையுலகை சேர்ந்தவர்கள் நல்ல நண்பர்கள் என்று கூறி திருமணம் செய்த சம்பவங்கள் பல முறை நடந்துள்ளது. இதை எல்லாம் பார்த்த ரசிகர்கள் பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாகவே நம்புகிறார்கள். அவர்களின் திருமணம் நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கார்த்திகேயா

கார்த்திகேயா

இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயாவின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் பிரபாஸ், ராணா, ராம் சரண், நாகர்ஜுனா, அகில், அனுஷ்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரபாஸ்

பிரபாஸ்

திருமணம் நடந்த அன்று அனுஷ்காவும், பிரபாஸும் ஒன்றாகவே இருந்தனர். மணமக்களை வாழ்த்தும்போது கூட இருவரும் ஜோடியாக வாழ்த்தினார்கள். அனுஷ்கா சிவப்பு நிற புடவையில் அழகாக இருந்தார். அனுஷ்காவையும், பிரபாஸையும் சேர்ந்து பார்த்த ரசிகர்கள் அவர்கள் கண்டிப்பாக காதலிப்பதாக பேசத் துவங்கிவிட்டனர்.

2019

2019

இந்த ஆண்டாவது பிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. சாஹோ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் புதுப்படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் அனுஷ்கா. அதென்ன அனுஷ்காவை ஹீரோயினாக போடாமல் இப்படி செய்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X