கவுதம் வாசுதேவ் மேனன் படம் எப்ப தொடங்கும்னு தெரியலை..நடிப்புக்கு குட்பை சொல்கிறாரா பிரபல நடிகை?

By

சென்னை: பிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. அவர் இப்போது நடித்துள்ள படம், சைலன்ஸ் (நிசப்தம்).

இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் எப்போதோ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.

நாங்கள் நண்பர்கள்

நாங்கள் நண்பர்கள்

லாக்டவுன் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்வதா, தியேட்டர் ரிலீஸுக்கு காத்திருப்பதா என்று தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். நடிகை அனுஷ்காவும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நண்பர்கள்தான், எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று இருவரும் கூறி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் இந்த கிசு கிசு தொடர காரணம். இதற்கிடையே கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அனுஷ்கா இதை மறுத்தார். இந்நிலையில், இஞ்சி இடுப்பழகி இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

கவுதம் வாசுதேவ் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனன்

அதையும் அனுஷ்கா மறுத்தார். சைலன்ஸ் படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, அதற்கு பிறகு, எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாகக் கூறியிருந்தார். கொரோனா காரணமாக இந்தப் படம் எப்போதும் தொடங்கும் என்று தெரியவில்லை. அதோடு மட்டுமல்லாமல், கவுதம் வாசுதேவ் மேனன் ஏற்கனவே பொருளாதாரச் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL
நிராகரித்து விட்டார்

நிராகரித்து விட்டார்

இதனால், அந்தப் படம் தொடங்குமா என்பதும் டவுட். அடுத்து வந்த சில வாய்ப்புகளையும் அவர் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா, நடிப்பை விட்டு விலகப் போவதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி நடிகை அனுஷ்கா தரப்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X