குடும்ப கதையாம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் கமிட் ஆன நடிகை அனுஷ்கா ஷெட்டி!
சென்னை: நடிகை அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார், அனுஷ்கா ஷெட்டி.
அவர் கடைசியாக சைலன்ஸ் படத்தில் நடித்திருந்தார். இதில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார்.

அமேசான் பிரைம்
அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. அமேசான் பிரைமில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெறவில்லை.

உடல் எடை அதிகரிப்பு
இந்தப் படத்தை அடுத்து அவர் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இடையில் அவர் உடல் எடை அதிகரித்தது. அதை குறைக்க முயன்றார். இதற்காக அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே அவர் படங்களில் நடிக்கவில்லை என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டன.

பின்னர் மறுப்பார்
இதற்கிடையே அனுஷ்காவின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாகும். அதை அவர் பின்னர் மறுப்பார். பிரபல ஹீரோ பிரபாஸை அவர் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

யுவி கிரியேஷன்ஸ்
நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று இருவரும் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இருந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

ராதே ஷ்யாம்
பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ், சமீபத்தில் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை தயாரித்து இருந்தது. இப்போது ராதே ஷ்யாம் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து அனுஷ்கா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறது. இதை மகேஷ் இயக்குகிறார்.


Click it and Unblock the Notifications











