அடுத்தாப்லயும் தள்ளிப் போச்சாம் ரிலீஸ் தேதி... அனுஷ்கா படத்துக்கு என்னதாங்க சிக்கல்?
சென்னை: அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள நிசப்தம் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவந்தார். இடையில் அவர் உடல் எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுவந்ததாகவும் கூறப்பட்டது.
Recommended Video
இந்நிலையில் அவர் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

காதல், திருமணம்
இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன.
நடிகர் பிரபாஸை அவர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்தனர். அவர் என் நண்பர் என்று அனுஷ்காவும், என் தோழி என்று பிரபாஸும் தெரிவித்தனர். இருந்தாலும் இவர்கள் பற்றிய கிசு கிசு இன்னும் ஓயந்த பாடில்லை.

நிசப்தம்
இதற்கிடையே உடல் எடை கூடிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அனுஷ்கா நடித்த படம் நிசப்தம். அனுஷ்காவுடன் மாதவன், மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.

அனுஷ்காவின் லுக்
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுஷ்காவின் லுக் கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் மாதவன் லுக் கடந்த வருடம் அக்டோபர் மாதமும் வெளியாயின. இதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். அதில் அவர் ஒல்லியான தோற்றத்தில் இருந்தார் அனுஷ்கா. அந்த போஸ்டரைப் பகிர்ந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ரிலீஸ் தள்ளி வைப்பு
இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் ஆகவில்லை. ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் இந்த மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றும் ரிலீஸ் ஆகவில்லை. பிப்ரவரி 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தள்ளிப்போனதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











