அதெல்லாம் வதந்தீங்க.. யாரும் நம்பாதீங்க.. அனுஷ்கா தரப்பு வெளியிட்ட அவசர அறிவிப்பு!
சென்னை: அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ள நிசப்தம் படம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படாது என படக்குழு அறிவித்துள்ளது.
Recommended Video
கோனா வெங்கட் மற்றும் டி.ஜி. விஷ்வா தயாரிப்பில் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் மற்றும் ஹாலிவுட் நடிகரான மைக்கேல் மேடிசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நிசப்தம்.

கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கடந்த ஜனவரி 31ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் கடைசி நேரத்தில், அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. நிசப்தம் படத்தை சைலன்ஸ் என மாற்றியமைத்து ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை நடிகர் மாதவன் வெளியிட்டார்.
ஆனால், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மீண்டும் அனுஷ்காவின் படம் ரிலீசாக முடியாமல் தள்ளிப் போய் இருக்கிறது.
இந்நிலையில், சைலன்ஸ் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் பரவின.

இதையறிந்த அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், நிச்சயம் நிலைமை சீரானதும் தியேட்டர்களிலேயே அனுஷ்காவின் நிசப்தம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 5 மொழிகளில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











