இன்னைக்கு அனுஷ்காவுக்கும் பிறந்தநாள்.. பெர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?
சென்னை: தென்னிந்திய சினிமா ரசிகர்களை தனது அழகு மற்றும் ஆக்ரோஷமான நடிப்பு திறமையால் வசீகரித்து வரும் நடிகை அனுஷ்காவின் 38வது பிறந்த நாள் இன்று.
பாகுபலி, பாகமதி படங்களை தொடர்ந்து நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் டீசர், அனுஷ்காவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியுள்ளது.
இயக்குநர் கெளதம் மேனன், தமிழ் மற்றும் மலையாள டிரைலர்களை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு, நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸ் செய்துள்ளார்.
கம்பேக்
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டான நடிகை அனுஷ்கா, அதற்கு பிறகு, உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்பட்டு வந்தார். அவரது அதீத உடல் எடை காரணமாக பல படங்கள் அனுஷ்காவின் கை நழுவி போனது. இந்நிலையில், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து, நிசப்தம் படத்தில் நடித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பிறகு நிசப்தம் அனுஷ்காவுக்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதவனுடன்
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தில் மாதவனுடன் மொபைலா மொபைலா என நடனமாடிய அனுஷ்கா, நீண்ட இடைவேளைக்கு பிறகு நிசப்தம் படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மாதவனுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கிறதாம்.

ஹாலிவுட் வில்லன்
கில் பில், ரிசர்வாயர் டாக்ஸ், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், தி ஹெட்ஃபுல் எய்ட் போன்ற பல படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் மேக்கேல் மேட்சன், அனுஷ்காவின் நிசப்தம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என 4 மொழிகளில் நிசப்தம் படம் வெளியாகிறது. ஆங்கிலத்தில் Silence எனும் பெயரில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டுள்ளது.
பிறந்த நாள் பரிசு
நடிகை அனுஷ்காவின் பிறந்த நாள் பரிசாக, நிசப்தம் பட டீசர் வெளியாகியுள்ளது. வாய் பேச முடியாத, சாக்ஷி எனும் ஓவியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா இந்த படத்தில் நடித்துள்ளார். மாதவன், மைக்கேல் மேட்சன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











